பிரிட்டனை விட இந்த நாடுகளில் எல்லாமே விலை குறைவு தான்...
பவுண்டின் மதிப்பு தற்போது வீழ்ச்சியடைந்திருந்தாலும் ஐரோப்பிய நாடுகளில் வாழுவதற்கும், சுற்றுலா செல்வதற்கும் பிரிட்டனை விட செலவு குறைவாகவே பிடிப்பது தெரியவந்துள்ளது.
அதாவது, சுற்றுலாவுக்கு வருபவர்கள் பிரான்ஸில் உள்ள பெரிய ஓட்டல்களில் இருவர் ஒரு இரவுக்கு £85 செலவு செய்தால் தங்க முடியும். ஆனால் பிரிட்டனில் இது அதிகமாகும்.
அதே போல £200 செலவு செய்தால் போதும், இந்த உணவகங்களில் திருப்தியாக சாப்பிட முடியும். Eurozoneல் உள்ள நாடுகளில் என்ன தான் பண வீக்கம் ஏற்பட்டாலும் பணத்தின் மதிப்புக்கு என்றுமே அங்கு மரியாதை உண்டு.
ஐரோப்பிய நாடுகளில் மிகப் பெரிய மாளிகைகள், தங்கும் விடுதிகளில் £100 செலவு செய்தால் ஒர் இரவு தங்க முடியும், ஆனால் இது போல லண்டனில் சாத்தியமேயில்லை.
அதே போல மது விடுதிகளிலும், ஐரோப்பியாவின் நாடுகளான இவைகளில் Portugal (Algarve) £20; Spain (Costa del Sol) £27.50; Cyprus £30; France (Nice) £51; and Italy (Sorrento) £64 இந்த அளவுக்கு மது மற்றும் உணவு வகைகள் சேர்த்து கிடைக்கிறது.
விமான சேவையில் கூட லண்டனின் Gatwick Express அதிமாக பணம் வசூலிக்கிறது, இது ஐரோப்பியாவில் குறைவாகும்.
மொத்தத்தில் ஐரோப்பியா நாடுகள் பிரிட்டனை விட சுற்றுலா செல்ல குறைவாகவே மக்களுக்கு செலவு வைக்கிறது.
பிரிட்டனை விட இந்த நாடுகளில் எல்லாமே விலை குறைவு தான்...
Reviewed by Author
on
November 07, 2016
Rating:

No comments:
Post a Comment