அண்மைய செய்திகள்

recent
-

மாவீரர்களின் தியாகங்கள் ஒரு போதும் அரசியல் மயப்படுத்தக் கூடாது- வட மாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் - Photos

உணர்வு ரீதியான அஞ்சலிகளே உயிர்த்தியாகங்களுக்குரிய உண்மையான அஞ்சலியாகும் எனவ வடமாகாண மாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் தெரிவித்துள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை(27) முல்லைத்தீவு மாவட்டம் வன்னிவிலாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் மாவீரர் தின நிகழ்வு இடம் பெற்றது.

இதன் போது கலந்து கொண்டு மாவீரர் தின அஞ்சலி உரை ஆற்றுகையிலேயே மாகாண சபை உறுப்பினர் செந்தில் நாதன் மயூரன் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,,,

முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி மாவீரர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மாவீரர் துயிலுமில்லங்களில்; மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட போதிலும் வவுனியாவில் மாவீரர் துயிலுமில்லங்களில் இன்னமும் இரானுவமே முகாம் அமைத்து நிலை கொண்டுள்ளனர்.

அடுத்த வருடம் வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் அஞ்சலி நிகழ்வுகள் நடாத்த வவுனியா மக்களுக்கு வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும்.

வவுனியா மாவட்ட மக்கள் சொந்த மாவட்டத்தில் அஞ்சலி செலுத்த ஏதுவாக படையினர் முகாமை அங்கிருந்து அகற்ற அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

நல்லெண்ணம் என்பது ஏட்டுச் சுரக்காய் இல்லை.

சிறுபான்மைச் சமூகத்தின் பசியை,உணர்வை புரிந்து கொள்ளாவிட்டால் நல்லெண்ணம் என்பது வெறுமனே எழுத்துக்கோர் வையாகவோ,வாய்ச் சொல்லாகவோ இருந்து விடும்.

எமது மக்களின் உரிமைகளுக்காகவும்,சுதந்திரத்திற்காகவும் போராடி மரணித்த உறவுகள் விதைக்கப்பட்ட இடங்களிலேயே நாம் சுதந்திரமாக அஞ்சலி செய்யும் உரிமைகளை மறுக்கின்ற அரசாங்கம் எமக்கு நியாயமான, எமது தியாகங்களுக்கு ஈடான, நிரந்தர அமைதிக்கான, நிலையான, சட்டபூர்வமான அரசியல் உரிமையை வழங்குமா? என்ற சந்தேகம் இந்த நல்லாட்சி மீதும் வரத்தான் செய்கிறது.

கடந்தகால அரசாங்கங்களைப் போலல்லாமல், மீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்றாமல், விரக்தி நிலைக்கு கொண்டு செல்லாமல், அரசியல் தீர்வில் நம்பிக்கைவைக்க நல்லெண்ணத்தை வெளிப்படுத்த அரசு சகல முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என வட மாகாணசபை உறுப்பினர் செந்தில் நாதன் மயூரன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.





மாவீரர்களின் தியாகங்கள் ஒரு போதும் அரசியல் மயப்படுத்தக் கூடாது- வட மாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் - Photos Reviewed by NEWMANNAR on November 28, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.