அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தில்'இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்' ஒருவரை தெரிவு செய்ய யுவதிகள் உற்பட 17 பேர் போட்டி.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 4 ஆவது இளைஞர் பாராளுமன்ற தேர்தல் எதிர்வரும் 18 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) இடம் பெறவுள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தில் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை தெரிவு செய்வதற்காக 17 வேட்பாளர்கள் தேர்தலில் களமிறங்கியுள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வன்னி மாகாண பணிப்பாளர் என்.எம்.முனவ்பர் தெரிவித்துள்ளார்.

இளைஞர் பாராளுமன்ற தேர்தலின் மன்னார் மாவட்ட நிலவவரம் தொடர்பாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வன்னி மாகாண பணிப்பாளர் என்.எம்.முனவ்பர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,,,,

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 4 ஆவது இளைஞர் பாராளுமன்ற தேர்தல் எதிர்வரும் 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாடளாவிய ரீதியில் இடம் பெறவுள்ளது.

குறித்த தேர்தலில் மன்னார் மாவட்டம் சார்பாக இரு யுவதிகள் உள்ளடங்களாக 17 பேர் போட்டியிடுகின்றனர்.

மன்னார் மாவட்டத்தில் மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் 04 வேட்பாளர்களும்,நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் 4 வேட்பாளர்களும், முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் 4 வேட்பாளர்களும்,மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் 2 வேட்பாளர்களும்,மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் 3 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

மன்னார் மாவட்டத்தில் போட்டியிடுகின்ற 17 வேட்பாளர்களில் இருவர் பெண்களாவர்.

மன்னார் மாவட்டத்தில் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை தெரிவு செய்வதற்கு 7 ஆயிரத்து 87 இளைஞர் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

வாக்களிப்பதற்காக மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் 3 வாக்களிப்பு நிலையங்களும், நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் 2 வாக்களிப்பு நிலையங்களும்,முசலி பிரதேச்ச செயலாளர் பிரிவில் 2 வாக்களிப்பு நிலையங்களும்,மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் 2 வாக்களிப்பு நிலையங்களும்,மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் 2 வாக்களிப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளது.

காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரை இளைஞர்கள் தமக்கு ஒதுக்கப்பட்ட வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று உரிய முறையில் வாக்களிக்க முடியும் என தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வன்னி மாகாண பணிப்பாளர் என்.எம்.முனவ்பர் மேலும் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில்'இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்' ஒருவரை தெரிவு செய்ய யுவதிகள் உற்பட 17 பேர் போட்டி. Reviewed by NEWMANNAR on December 16, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.