இலவச கணித பாட கருத்தரங்கு….எதிர்பார்த்த வினாக்கள் 90% வந்துள்ளது….ஆதாரங்கள் இதோ….
மன்னார் மாவட்டத்தின் கல்விவலையத்தில் உள்ள பாடசாலைகளில் இந்த வருடம்-2016 க.பொ.சாதாரண தரப்பரீட்சை எழுதவிருக்கும் மாணவமாணவிகளுக்கான முன்னோடிக்கருத்தரங்கு முற்றிலும் இலவசமாக யதீஸ் புத்தகசாலை உரிமையாளர் திரு.S.R.யதீஸ் அவர்களின் ஏட்பாட்டில் அதிபர்கள் ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் மிகவும் சிறப்பாக நடை பெற்றது.
மாணவர்களுக்கான கருத்தரங்கினை இலங்கையின் கொழும்பு பிரபலமான மும்மொழி கணிதபாட விரிவுரையாளரும் உசாத்துணை நூலாசிரியர் S.நசீர் அவர்களினால் இலவசமாக 10-10-2016 தொடங்கி 20-11-2016 வரையும் 40 நாட்கள் நடைபெற்ற இலவசகணிதபாட கருத்தரங்கின் போது க.பொ.சாதாரண தரப்பரீட்சையில் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட வினாக்களில் 90 வீதமானவை வந்துள்ளது.
இது வழமையாக ஏனைய மாவட்டங்களில் நடைபெறுவதுதான் இம்முறைதான் எமது மன்னார் மாவட்ட மாணவர்களுக்கு இலவசமாக கிடைத்துள்ளது.
எமது மன்னார் மாவட்டத்தில் இவ்வாறானதொரு இலவச கருத்தரங்கினை தனியொருவராக முன்னின்று ஏற்பாடு செய்து மாணவர்கள் மட்டில் கொண்டுள்ள கரிசனையும் மன்னார் மாவட்த்தின் மீது கொண்ட பற்றும் வெளிப்படையாக தெரிகின்றது. இதற்கு தனது பங்களிப்பினை யதீஸ் புத்தகசாலை உரிமையாளர் திரு.S.R.யதீஸ் அவர்களுக்கும் அத்தோடு ஒத்துழைப்பு வழங்கிய வலையக்கல்விப்பணிப்பாளர் அதிபர்கள் ஆசிரியர்களையும் பாராட்டுகின்றோம்.
இம்முறை மன்னார் மாவட்டம் கணிதபாடத்தில் அதிகபுள்ளிகள் பெற்றுக்கொள்ளும் மாணவமாணவிகளை அதிகமாகப்பெறும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை….
மீண்டும் ஒரு முறை அதேவேளை நிதிப்பங்களிப்பினை வழங்கி கல்விக்காக சேவையாற்றும் யதீஸ் புத்தகசாலை உரிமையாளர் திரு.S.R.யதீஸ் அவர்களையும் அனுமதி வழங்கி மாணவமாணவிகளின் நலனில் அக்கறைகொண்டு செயலாற்றும் வலையக்கல்விப்பணிப்பாளர் அதிபர்கள் ஆசிரியர்களை நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்தி நிற்கின்றோம்.
தொகுப்பு-வை-கஜேந்திரன்-


இலவச கணித பாட கருத்தரங்கு….எதிர்பார்த்த வினாக்கள் 90% வந்துள்ளது….ஆதாரங்கள் இதோ….
Reviewed by Author
on
December 16, 2016
Rating:

No comments:
Post a Comment