இந்தியா - திருச்சி மாவட்டத்தில் வெடிமருந்து தொழிற்சாலையில்: 21 பேர் பலி....
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே முருங்கப்பட்டியில் செயல்பட்டு வந்த வெடிமருந்துத் தொழிற்சாலையில் இன்று காலை ஏழரை மணி அளவில் ஏற்பட்ட தீவிபத்தால் வெடிபொருட்கள் வெடித்துச்சிதறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தொழிற்சாலை வெற்றிவேல் என்பவருக்குச் சொந்தமானது. மேலும் இந்த ஆலையில் முப்பதுபேர் பணிபுரிந்து வந்துள்ளனர்.
வெடிவிபத்தில் அந்தக் கட்டடமே இடிந்து தரைமட்டமானது. தொழிற்சாலையில் பணியாற்றிய தொழிலாளர்கள் உடல் சிதறியும், இடிபாடுகளில் சிக்கியும் உயிரிழந்தனர். இந்த கோர விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும், தீயணைப்புப் படையினரும் பொலிஸாரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
தமிழக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மீட்புப் பணிகளைப் பார்வையிட்டார். காயமடைந்த 30பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியா - திருச்சி மாவட்டத்தில் வெடிமருந்து தொழிற்சாலையில்: 21 பேர் பலி....
Reviewed by Author
on
December 02, 2016
Rating:

No comments:
Post a Comment