மாற்றுத்திறனாளிகள் அதிகம் உள்ள மாவட்டமாக முல்லைத்தீவு...
மாற்றுத்திறனாளிகளை அதிகமாக கொண்ட மாவட்டமாக முல்லைத்தீவு மாவட்டம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும் அங்குள்ள மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரம் சிதைவடைந்து காணப்படுகின்றதாக ஒளிரும் வாழ்வும் மாற்றுதிறனாளிகளுக்கான அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.
யாழ். ஊடக அமையத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு கவலை வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து கருத்துவெளியிட்ட அவர்கள்,
புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட 19 கிராம செயலர் பிரிவிலும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கை, கால்களை இழந்தும், பார்வையற்றவர்களாகவும், இடுப்புக்கு கீழ் இயங்காமலும் இருக்கின்றார்கள்.
மாற்றுத்திறனாளிகளை கண்டு நிலைபேறான அபிவிருத்தியை பெற்றுக்கொடுக்க வேண்டும்.
யுத்தம் நிறைவடைந்த பின்னர் கடந்த 7 வருடங்களாக அடிப்படை வசதிகளைக்கூட பூர்த்தி செய்ய முடியாத சூழ்நிலையில் பலர் வசித்து வருகின்றார்கள்.
அரசாங்கத்தினால் வீட்டுத்திட்டம் மற்றும் மலசலகூட வசதிகள் வழங்கப்பட்டிருந்தாலும் அவை தொட்டும் பாதியும் தொடர் பாதியுமாக இருக்கின்றது.
முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்கள் குடிநீர் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றார்கள்.
மாற்றுத்திறனாளிகளின் நிலைபேறான வேலைத்திட்டத்தின் கீழ் அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்த தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட வேண்டிய தேவை இருக்கின்றது.
எனவே, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்த நிதி உதவிகளை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதேவேளை, வாழ்வாதார உதவிகள் மற்றும் ஏனைய உதவித்திட்டங்களை நாடி அரசியல்வாதிகளிடமும் சென்றாலும் அவர்களும் தம்மைப் புறக்கணிப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்கள்.
மாற்றுத்திறனாளிகள் அதிகம் உள்ள மாவட்டமாக முல்லைத்தீவு...
Reviewed by Author
on
December 03, 2016
Rating:

No comments:
Post a Comment