அண்மைய செய்திகள்

recent
-

80 வயது மூதாட்டி ரூ.740 கோடிக்கு அதிபதி......


கனடா நாட்டில் ஓய்வு பெற்ற 80 வயதான மூதாட்டி ஒருவர் ஒரு நிமிடத்தில் ரூ.740 கோடிக்கு அதிபதியாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவில் அரசாங்க அனுமதியுடன் லோட்டோ மேக்ஸ் லாட்டரி மூலம் மில்லியன் கணக்கிலான பணம் பரிசாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அல்பேர்ட்டா மாகாணத்தை சேர்ந்த Lois Olsen (80) என்ற மூதாட்டி ஒருவர் அங்குள்ள கடை ஒன்றில் லாட்டரி வாங்கியுள்ளார்.

பின்னர், கடந்த நவம்பர் 14-ம் திகதி உள்ளூரில் உள்ள வணிக வளாகத்தில் அந்த லாட்டரியை பரிசோதனை செய்துள்ளார்.

அப்போது, முதன் முறையாக எந்திரம் 15 டொலர் காட்டியுள்ளது. இரண்டாவதாக 500 டொலர் காட்டியதால் குழப்பம் அடைந்த மூதாட்டி ஊழியரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

‘இந்த எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. எண்களை தவறாக காட்டுகிறது’ என மூதாட்டி கூறியுள்ளார்.

லாட்டரியை வாங்கிய ஊழியர் எந்திரத்தில் மீண்டும் நுழைத்து பரிசோதித்த பின்னர் ‘ எந்திரத்தில் கோளாறு இல்லை. உங்களுக்கு 50 மில்லியன் டொலர்(743,32,50,000 இலங்கை ரூபாய்) பரிசு விழுந்துள்ளது எனக் கூறியுள்ளார்.

ஊழியரின் பதிலால் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்ற அவர் உடனடியாக தனது உறவினர்களிடம் கூறிவிட்டு பரிசு தொகையை பெற்றுள்ளார்.

பாதுகாப்பு கருதி இதுவரை மூதாட்டியின் பேட்டி எதுவும் வெளியே வரவில்லை. ஆனால், தற்போது முதன் முதலாக பத்திரிக்கைகளுக்கு அவர் பேட்டியளித்துள்ளார்.

அப்போது, ‘இவ்வளவு பெரிய தொகை பரிசாக கிடைத்துள்ளது மிகவும் மகிழ்ச்சியான செய்தி தான். ஆனால், ஒரு சிறிய வருத்தமும் இருக்கிறது.

தற்போது இந்த பணம் முழுவதையும் அனுபவிக்கும் வயதை நான் கடந்து விட்டேன். 20, 30 ஆண்டுகளுக்கு முன்னர் இப்பரிசு கிடைத்திருந்தால் கூடுதல் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்’ எனக் கூறியுள்ளார்.

பரிசு தொகையை எதற்காக செலவிட உள்ளீர்கள்? என அவரிடம் கேள்வி எழுப்பியபோது, ‘இந்த பணத்தை பயன்படுத்தி எனது குடும்ப உறுப்பினர்களின் வசதிகளை மேம்படுத்துவேன்.

11 ஆண்டுகளாக உள்ள காரை மாற்றிவிட்டு புதிதாக சொகுசு கார் வாங்குவேன்.

இவையெல்லாம் விட முக்கியமானதாக, எனது நீண்ட நாள் கனவான அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் செல்வேன்’ என உற்சாகமாக தெரிவித்துள்ளார்.

80 வயது மூதாட்டி ரூ.740 கோடிக்கு அதிபதி...... Reviewed by Author on December 03, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.