வவுனியாவில் 8 கோடி செலவில் கழிவுநீர் சுத்திகரிப்பு செயற்றிட்டம்...
வவுனியா நகரின் மத்தியில் காணப்படும் கழிவு நீரை சுத்திகரித்து, நன்னீராக மாற்றி குளத்துடன் இணைக்கும் செயற்திட்டம் நிறைவடைந்துள்ளதாக இந்த செயற்திட்டத்தின் பொறுப்பாளர் தெரிவித்தார்.
யுனொப்ஸ் நிறுவனத்தின் நிதி உதவியுடன் எட்டு கோடி ரூபா செலவில் மூன்று மாதங்களாக இந்த வேலைத்திட்டமானது நடைப்பெற்று வருகிறது.
நீர்பாசன திணைக்களமும், நகரசபையும் இணைந்து இத்திட்டத்தினை மேற்கொண்டிருந்தன.
எனினும் இந்த வேலைத்திட்டங்கள் யாவும் முடிவடைந்த நிலையில் இன்னும் ஓரிரு வாரங்களிற்குள் செயற்றிட்டத்தினை கையளிக்கவுள்ளதாக பொறுப்பாளர் தெரிவித்தார்.
குறித்த கழிவு நீர் தாங்கியானது 5 தொட்டிகளை கொண்டுள்ளதுடன் 3 தொட்டியினுள் கழிவுநீரை சுத்தப்படுத்தி மற்றைய இரு தொட்டியினுள் சென்று பின்னர் நன்னீராக வவுனியா குளத்தில் இணைகின்றது.
பெரும் மழை வீழ்ச்சி ஏற்படும் சந்தர்ப்பத்திலும் கூட சுத்திகரிக்க கூடிய வகையில் மோட்டார் எஞ்சின்கள் பொருத்தப்பட்டுள்ளன.
வவுனியா நகரின் மத்தியில் உள்ள கழிவுகள், எண்ணெய் பதார்த்தங்கள், நச்சு பொருட்கள் போன்ற கழிவுபொருட்கள் குளத்தினுள் செல்வதால் குளம் மாசடைதல் மற்றும் நகரின் மத்தியில் துர்நாற்றம் வீசுதல் போன்றவற்றினாலேயே இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
-S,SASI-

வவுனியாவில் 8 கோடி செலவில் கழிவுநீர் சுத்திகரிப்பு செயற்றிட்டம்...
Reviewed by Author
on
December 28, 2016
Rating:

No comments:
Post a Comment