வவுனியாவில் இடம்பெறும் ஊழல்களை உயரதிகாரிகள் கண்டுகொள்ளவில்லையா...? மக்கள் விசனம்
வவுனியா வடக்கில் பல வருடங்களாக சமூர்த்தியில் ஊழல் இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.கடந்த ஜூலை மாதமளவில் ஆதாரத்துடனும் பாதிக்கப்பட்ட மக்களின் குமுறல்களுடனும் இது சம்பந்தமான மகஜர் ஒன்றை வவுனியா மாவட்ட அரச அதிபருக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கும், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கும் வழங்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.இதேவேளை தொடர்ந்தும் இந்த பிரதேசங்களில் சமூர்த்தி போன்ற அரசின் மக்கள் நலன் திட்டங்களில் மோசடிகள் நடைபெறுவதாக அறியப்படுகின்றது.அத்துடன் ஏற்கனவே தவறிழைத்தவர்கள் மீது எதுவிதமான சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தினால் உத்தியோகஸ்தர்கள் பயமற்று இருக்கிறார்கள் என்பதுடன் இவ்வாறான மோசடி உத்தியோகஸ்தர்களுக்கு உயரதிகாரிகளின் ஆதரவு இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
வவுனியா வடக்கில் இடம்பெறும் இந்த ஊழல்களை வடக்கு பிரதேச செயலாளர் ஏன் கண்டுகொள்ளவில்லை?அத்துடன் அரசியல் பிரமுகர்கள் ஏன் இதற்கு கேள்வி கேட்கவில்லை எனவும் தாம் என்ன ஒதுக்கப்பட்ட மக்கள் என பாதிக்கப்பட்டவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.மேலும் சகல அதிகாரிகள் மீதும் உத்தியோகஸ்தர்கள் மீதும் உரிய நடவடிக்கையை அதற்குறிய அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் இதற்குரிய தீர்வினை பெற்றுத்தருமாறும் பாதிக்கப்பட்ட மக்கள் கேட்டுக்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா வடக்கில் இடம்பெறும் இந்த ஊழல்களை வடக்கு பிரதேச செயலாளர் ஏன் கண்டுகொள்ளவில்லை?அத்துடன் அரசியல் பிரமுகர்கள் ஏன் இதற்கு கேள்வி கேட்கவில்லை எனவும் தாம் என்ன ஒதுக்கப்பட்ட மக்கள் என பாதிக்கப்பட்டவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.மேலும் சகல அதிகாரிகள் மீதும் உத்தியோகஸ்தர்கள் மீதும் உரிய நடவடிக்கையை அதற்குறிய அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் இதற்குரிய தீர்வினை பெற்றுத்தருமாறும் பாதிக்கப்பட்ட மக்கள் கேட்டுக்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் இடம்பெறும் ஊழல்களை உயரதிகாரிகள் கண்டுகொள்ளவில்லையா...? மக்கள் விசனம்
Reviewed by Author
on
December 28, 2016
Rating:

No comments:
Post a Comment