வவுனியா பேரூந்து நிலையத்தில் கஞ்சா மீட்பு....
வவுனியா பேரூந்து நிலையத்தில் வைத்து வவுனியா மதுஒழிப்பு பிரிவு பொலிஸாரால் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
வவுனியா பேரூந்து நிலையத்தில் 25 ,12 ,2016 மாலை சந்தேகத்திற்கிடமாக நடமாடித் திரிந்த ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவரிடம் இருந்து 3 கிலோ 550 கிராம் பெறுமதியான கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.இதேவேளை, குறித்த நபரை கைதுசெய்துள்ள மதுஒழிப்பு பிரிவு பொலிஸார், இன்று நீதிமன்றத்தில் குறித்த சந்தேக நபரை முன்னிலைப்படுத்தவுள்ளனர்.அண்மைக்காலமாக வடக்கு, கிழக்கு பகுதிகளில் அதிகளவிலான கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா பேரூந்து நிலையத்தில் கஞ்சா மீட்பு....
Reviewed by Author
on
December 28, 2016
Rating:

No comments:
Post a Comment