நடுவானில் மாயமான ரஷ்ய விமானம்: கருங்கடலில் விழுந்து விபத்து! 91 பேர் பலி?
ரஷ்யாவிலிருந்து புறப்பட்ட விமானம் கருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சின் தகவல் திணைக்களம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
விபத்துக்குள்ளான விமானத்தின் பாகங்களையும், அதில் பயணித்தவர்களையும் மீட்பதற்கு குறித்த பகுதிக்கு கப்பல்கள் விரைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடுவானில் மாயமான ரஷ்ய விமானம்
ரஷ்யாவிலிருந்து 91 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் தொடர்பு துண்டிக்கப்பட்டு காணாமல் போயுள்ளது.
ரஷ்ய செய்தி நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள ஒரு முக்கிய அறிக்கையில், ரஷ்ய விமானமான Tu-154, சோச்சி விமான தளத்திலிருந்து ரஷ்ய நேரப்படி 05:20 க்கு 91 பயணிகளை ஏற்றிக் கொண்டு சிரியாவை நோக்கி சென்றது.
விமானம் புறப்பட்டு சில நிமிடங்களில் ரேடார் கருவியில் உள்ள சிக்னல் துண்டிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சகத்துக்கு சொந்தமான விமானம் என்றும், பத்திரிக்கையாளர்கள், ராணுவத்தினர் மற்றும் இசைக்கலைஞர்களும் பயணித்ததாக தெரியவந்துள்ளது.
விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடந்து வரும் வேளையில், விமானம் விபத்தில் சிக்கியிருக்குமா அல்லது சதிச்செயல் ஏதும் இருக்குமா என சந்தேகிக்கப்படுகிறது.
நடுவானில் மாயமான ரஷ்ய விமானம்: கருங்கடலில் விழுந்து விபத்து! 91 பேர் பலி?
Reviewed by Author
on
December 25, 2016
Rating:

No comments:
Post a Comment