நீதிமன்றில் தமிழ் கொலை: அலட்சியமாக நடந்து கொள்கின்றதா அரசு...
நாட்டில் பல இடங்களினதும், பல நிறுவனங்களினதும் பெயர்கள் தமிழில் பொறிக்கும் போது எழுத்துப்பிழைகளுடன் இருப்பதை நாங்கள் பல்வேறு தடவைகளில் சுட்டிக்காட்டி இருந்தோம்.
ஆனால் தற்போது நாட்டில் நிதிமோசடியை அம்பலப்படுத்தும் நிறுவனமான நிதிமோசடி பிரிவின் பெயர் பலகையிலும் நிதி (மோசுடி) விசாரணை பிரிவு என உள்ளது.
இதை பல்வேறு தடவைகள் எடுத்து கூறப்பட்டிருந்தாலும் இதுவரையில் அவர்கள் மாற்றியபாடு இல்லை.
இது அப்படி இருக்க நாட்டிற்கு நீதியினை பக்கச்சார்பின்றி வழங்குவது நீதிமன்றம், ஆனால் கொழும்பில் உள்ள பிரதான நீதவான் நீதிமன்ற கட்டட தொகுதியில் நீதிமன்றத்திற்கு எவ்வாறு வரவேண்டும் என்று உள்ள ஒரு பதாதையில் "மரயாதையுடன்) நடந்து கொள்ளுமாறு" என்று தமிழ் அங்கும் கொலை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறாக பல இடங்களில் தமிழ் எழுத்து பிழைகள் அங்காங்கே காணப்பட்டாலும் அதனை நிவர்த்தி செய்யும் மனப்பாங்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை.
நேற்று பாராளுமன்றத்தில் அரசகரும மொழிகள் தொடர்பான குழுநிலை விவாதத்தில் இதற்கு பொறுப்பான அமைச்சர் மனோ கணேசன் விவாதித்தார்.
இதன்போது அவரும் தமிழ் கொலை செய்யப்படுவதை சுட்டிக்காட்டியதுடன், கண்டிக்கு செல்லும் பஸ்ஸின் பெயர்பலகையில், “க” எழுத்துக்கு பதிலாக “கு” எழுத்து போடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி சிவனொலிபாத மலைக்குச் செல்லும் மலையில் சுற்றாடலை பாதுகாப்பது தொடர்பான பெயர் பலகை ஒன்று உள்ளது. அதிலும் தமிழ் மிக மோசமாக உள்ளதை அவதானிக்கலாம்.
இது தொடர்பான அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துக்கொள்கின்றோம்.
நீதிமன்றில் தமிழ் கொலை: அலட்சியமாக நடந்து கொள்கின்றதா அரசு...
Reviewed by Author
on
December 02, 2016
Rating:

No comments:
Post a Comment