வவுனியாவில் கரடி தாக்கி இரு பெண்கள் காயம்
வவுனியாவில் கரடி தாக்கியதில் இரு பெண்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவமானது மாமடு பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
விறகு வெட்டுவதற்கு காட்டுப்பகுதிக்குச் சென்ற போதே அவர்கள் கரடியின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.
இச்சம்பவத்தில் அப்பகுதியைச் சேர்ந்த கு.சீலாவதி (வயது 56), எஸ்.சிறியலதா (வயது 53) ஆகிய இருவரே இவ்வாறு காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியாவில் கரடி தாக்கி இரு பெண்கள் காயம்
Reviewed by NEWMANNAR
on
December 25, 2016
Rating:

No comments:
Post a Comment