மன்னார் மாவட்ட மீனவ சங்கங்களின் பிரதி நிதிகளுக்கும் இந்திய விரிவுரையாளர் சூரிய நாராயணனுக்கும் இடையில் தலைமன்னார் கடற்படை முகாமில் விசேட சந்திப்பு.-Photo
மன்னார் மாவட்டத்தில் உள்ள மீன்பிடி சங்க பிரதி நிதிகளுக்கும்,இந்திய விரிவுரையாளரான சூரிய நாராயணனுக்கும் இடையில் இன்று வெள்ளிக்கிழமை (2) காலை தலைமன்னார் கடற்படை முகாமில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றுள்ளதாக வடமாகாண கடற்தொழில் இணையத்தின் தலைவர் என்.எம்.ஆலம் தெரிவித்துள்ளார்.
தலைமன்னார் கடற்படை முகாமில் இடம் பெற்ற குறித்த கலந்துரையாடல் தொடர்பாக வடமாகாண கடற்தொழில் இணையத்தின் தலைவர் என்.எம்.ஆலம் மேலும் தெரிவிக்கையில்,,,
இந்திய விரிவுரையாளரான சூரிய நாராயணன் மன்னார் மாவட்டத்தில் உள்ள மீன் பிடி கிராமங்களில் உள்ள மீனவ சங்கங்களின் பிரதி நிதிகளை சந்தித்து கலந்தரையாடல் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக எமக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
குறித்த கலந்துரையாடல் இன்று வெள்ளிக்கிழமை(2) காலை 11 மணியளவில் தலைமன்னார் கடற்படை முகாமில் இடம் பெற்றது.
இதன் போது மீனவக்கிராமங்களான பள்ளிமுனை, உப்புக்களம், பணங்கட்டிக்கோட்டு, தாழ்வுபாடு, எருக்கலம்பிட்டி, புதுக்குடியிறுப்பு, காட்டாஸ்பத்திரி, பேசாலை, தலைமன்னார் கிராமம் மற்றும் தலைமன்னார் பியர் ஆகிய மீனவக்கிராமங்களில் உள்ள மீன் பிடி சங்கங்களின் பிரதி நிதிகள் சுமார் 37 பேர் வரை குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
குறித்த கலந்துரையாடலின் போது இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் கூட்டாக தொழில் செய்தல் மற்றும் இந்திய மீனவர்கள் இலுவைப்படகை பயண்படுத்தாது இலங்கை மீனவர்களுடன் இணைந்து மீன்பிடியில் ஈடுபடுதல் போன்றவை தொடர்பாக ஆராயப்பட்டதோடு கூட்டாக இணைந்து இந்திய-இலங்கை மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டால் என்ன? என்ற கேல்வியை இந்திய விரிவுரையாளரான சூரிய நாராயனன் முன்வைத்தார்.
எனினும் மன்னார் மாவட்ட மீனவ சங்கங்களின் பிரதி நிதிகள் ஒட்டு மொத்தமாக குறித்த கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு,இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பினுள் நுழைந்து மீன் பிடியில் ஈடுபடுதல், இலங்கை கடற்பரப்பில் கூட்டாக தொழில் செய்தல் போன்றை கருத்துக்கு ஒட்டு மொத்தமாக மறுப்புத்தெரிவித்தள்ளனர்.
எனினும் இந்திய மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் தமது மீன் பிடி தொழிலை மேற்கொள்ள வேண்டும் எனவும் இலங்கை கடற்பரப்பினுள் மீன் பிடிக்க நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என மீனவ சங்க பிரதி நிதிகள் கூட்டாக தெரிவித்துள்ளனர்.
இதே வேளை மீனவர்கள் தொடர்பாக கலந்துரையாடல்களை மேற்கொள்ள வேண்டுமாக இருந்தால் திணைக்களங்கள் அல்லது மீன்பிடி சமாசம் போன்ற அலுவலகங்களில் நடத்தி இருக்க முடியும்.
ஏன் தலைமன்னார் கடற்படை முகாமில் நடத்துகின்றீர்கள் என இந்திய விரிவுரையாளரான சூரிய நாராயணனிடம் வடமாகாண கடற்தொழில் இணையத்தின் தலைவர் என்.எம்.ஆலம் ஆகிய நான் கேல்வி எழுப்பினேன்.
அதற்கு பதிலலித்த இந்திய விரிவுரையாளரான சூரிய நாராயனன் கடந்த வாரம் கொழும்பில் இடம் பெற்ற பாதுகாப்பு தொடர்பான கலந்தரையாடலில் நானும் கலந்து கொண்டேன்.
இதன் போது மன்னார் மாவட்ட மீனவ சங்கங்களின் பிரதி நிதிகளை நான் சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தேன்.
அதற்கு அமைவாக கடற்படை குறித்த ஏற்பாட்டை செய்து தந்ததாக அவர் தெரிவித்தார் என வடமாகாண கடற்தொழில் இணையத்தின் தலைவர் என்.எம்.ஆலம் மேலும் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட மீனவ சங்கங்களின் பிரதி நிதிகளுக்கும் இந்திய விரிவுரையாளர் சூரிய நாராயணனுக்கும் இடையில் தலைமன்னார் கடற்படை முகாமில் விசேட சந்திப்பு.-Photo
Reviewed by NEWMANNAR
on
December 02, 2016
Rating:
No comments:
Post a Comment