கிளிநொச்சி மக்களுக்கு அவசர எச்சரிக்கை
கிளிநொச்சி மக்களுக்கு ஓர் அவசர வேண்டுகோள் விடுத்துள்ள அனர்த்த முன்னாயத்த நடவடிக்கைகள் கீழ்வருமாறு. சடுதியான கனமழை காரணமாகவும் கடும் சுழல்காற்றுக் காரணமாகவும் நேரக்கூடிய போக்குவரத்துத் தடை, மின்சார மற்றும் தொலைத்தொடர்புச் சேவைத் தடைகளை கருதிற்கொண்டு பின்வரும் முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், 38 வாரங்கள் (9 மாதத்திற்கு) அல்லது அதற்கு மேற்பட்ட கர்ப்பகாலம் உள்ள கர்ப்பவதிகள் மற்றும் பிறந்து ஒருமாதத்திற்கு உட்பட்ட வயதுடைய பச்சிளம் பாலகர்கள் ஆகியோர் அடுத்துவரும் 24 மணிநேரத்திற்கு அருகில் உள்ள வைத்தியசாலைகளில் தங்கியிருப்பது பாதுகாப்பானது.
கர்ப்பவதிகள், பாலூட்டும் தாய்மார்கள் முள்ளந்தண்டுவடம் பாதிப்புற்றோர் தத்தமது பகுதிகளில் வெள்ள அபாயம் அல்லது போக்குவரத்துத் தடை நேரிடும் என கருதினால் அருகில் உள்ள வைத்தியசாலைக்கு சென்று தற்காலிகமாகத் தங்கமுடியும். கொதித்தாறிய நீரைப்பருகுவதையும் உணவு உட்கொள்ள முன்னர் கைகளைக் கழுவிக்கொள்வதையும் தவறாது கடைப்பிடிக்கவும். தற்காலிகமாக இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கநேரிட்டால் குறித்த பகுதிக்கான சுகாதார வெளிக்களப் பணியாளர்களுக்கு (Public health filed officers) அல்லது 0770212765 என்ற இலக்கத்திற்கு உடனடியாக அத்தகவலைத் தெரிவியுங்கள்.
இந்த செய்தி தமிழ்த்தேசிய செய்திகள் இணையத்திலிருந்து பிரதிசெய்யப்பட்டது http://www.tnnlk.com/?p=24603 .
கிளிநொச்சி மக்களுக்கு அவசர எச்சரிக்கை
Reviewed by NEWMANNAR
on
December 01, 2016
Rating:

No comments:
Post a Comment