அண்மைய செய்திகள்

recent
-

சீரற்ற காலநிலை-மன்னார் மக்களின் இயல்பு நிலை பாதிப்பு-Photos

சீரற்ற கால நிலையின் காரணமாக மன்னார் மாவட்டத்தில் மக்களின் இயல்பு நிலை கடுமையாக பாதிப்படைந்துள்ளது.

மன்னாரில் இருந்து காங்கேசன் துறை மற்றும் திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்கரைக்கு அப்பாலுள்ள கடற்பரப்புக்களில் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று(1) வியாழக்கிழமை அதிகாலை முதல் மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதோடு,கடும் குளிர் காற்றும் வீசி வருகிறன்றது.

இதனால் மன்னார் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் காற்றுடன் கூடிய மாழை விட்டு விட்டு பெய்து வருவதினால் சில வீதிகளில் மரம் முறிந்து வீழ்ந்துள்ளது.

எனினும் குறித்த மரங்களை வீதிகளில் இருந்து அகற்ற உரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும்,இதனால் வீதியால் பயணிப்பவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.





சீரற்ற காலநிலை-மன்னார் மக்களின் இயல்பு நிலை பாதிப்பு-Photos Reviewed by NEWMANNAR on December 01, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.