மன்னார் முதல் திருகோணமலை வரையான காங்கேசன் துறைக் கடற்பிராந்தியத்தில் மூன்று மீற்றர் உயரத்துக்கு கடல் அலை மேலெழும்பும் அபாயம்-விழிப்போடு இருக்குமாறு கோரிக்கை!
வங்காளவிரிகுடாவில் உருவாகிய நாடா சூறாவளி முல்லைத்தீவில் இருந்து சுமார் 400 கிலோமீற்றர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் இந்தியாவின் தமிழகத்தை கடந்து செல்லும் வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த சூறாவளி காரணமாக இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் வெள்ளிக்கிழமை வரையில் கடும் மழை பெய்யக் கூடிய வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி காணப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
மழை அல்லது இடியுடன் கூடிய மழை மேல் , வட-மேல் , சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் ஏற்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
'நானா' சூறாவளி யாழ். மாவட்டத்தில் மையம்: மக்களை அவதானமாகச் செயற்படுமாறு கோரிக்கை!
'நானா' சூறாவளியுடன்கூடிய மழைவீழ்ச்சியினால் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் சங்கரப்பிள்ளை ரவி தெரிவித்துள்ளார்.
நானா சூறாவளி தற்போது யாழ். மாவட்டத்தில் மையம் கொண்டுள்ளதாகவும், இதன் காரணமாக மழைவீழ்ச்சிஎதிர்வரும் இரண்டு நாட்களுக்குத் தொடர்ச்சியாக நீடிக்கும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
யாழ்.குடாநாட்டில் தற்போது மையம் கொண்டுள்ள சூறாவளியுடன் கூடிய காலநிலை தொடர்பாகச் சற்று முன்னர் தொலைபேசியூடாகத் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
நானா சூறாவளியுடன் கூடிய காலநிலை காரணமாக மன்னார் முதல் திருகோணமலை வரையான காங்கேசன் துறைக் கடற்பிராந்தியத்தில் மூன்று மீற்றர் உயரத்துக்கு கடல் அலை மேலெழும்பும் அபாயம் காணப்படுகிறது.
காங்கேசன்துறைக் கடற்பரப்பில் பாரிய அலைகளுடன் கூடிய காலநிலை நிலவும் எனவும் கூறப்பட்டுள்ளது.
யாழ்.குடாநாட்டுக் கடற்பரப்பிலிருந்து 200 கிலோமீற்றருக்கு அப்பால் வரை நானா சூறாவளியியுடன் கூடிய மழைவீழ்ச்சி காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலில் மீன்பிடியில் ஈடுபடுவதை இன்றும்,நாளையும் தவிர்க்குமாறும் யாழ்.குடாநாட்டு மீனவர்களுக்கு அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்..
இரண்டு நாட்களின் பின்னர் நானா சூறாவளி இந்தியாவின் இராமேஸ்வரத்தின் ஊடாகத் தென்னிந்தியா நோக்கி நகரும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளதாகவும் யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் சங்கரப்பிள்ளை ரவி மேலும் தெரிவித்தார்.
இதனை யாழ் மாவட்ட அனரந்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் சங்கரப்பிள்ளை ரவி இன்று தெரித்தமை கூறிப்பிடதக்கது.

Reviewed by NEWMANNAR
on
December 01, 2016
Rating:

No comments:
Post a Comment