மன்னாரில் இன்று வை.கஜேந்திரனின் ‘மறுபிறப்பு’ நூல் வெளியீடு....
மன்னாரில் ‘மறுபிறப்பு’ நூல் வெளியீடு
மன்னார் தமிழமுது நண்பர்கள் வட்டம் நடத்தும் வை. கஜேந்திரனின் ‘மறுபிறப்பு’ சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீடு 13.12.2016 செவவாய்க்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு மன்னார் நகரசபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
வவுனியா மாவட்டத் தமிழ்ச்சங்கத்தின் அமைப்பாளர், தமிழறிஞர்,தமிழருவி த.சிவகுமாரன் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில்
பிரதம விருந்தினர்களாக
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இ.சார்ள்ஸ் நிர்மலநாதன், கே.காதர் மஸ்தான் மன்னார் மேலதிக அரச அதிபர் திருமதி. அ.ஸ்ரான்லி டிமெல்லும் ஆகியோரும்
சிறப்பு விருந்தினர்களாக
பேசாலை புனித பற்றிமா மகா வித்தியாலய அதிபர் அருட்சகோதரர் ஜே.ஸ்ரனிஸ்லஸ், மன்னார் தமிழ்ச்சங்கத் தலைவர் சிவஸ்ரீ மகா தர்மகுமாரக் குருக்கள், மன்னார் நகரசபையின் செயலாளார் எக்ஸ்.எல்.றெனால்டோ, கிளிநொச்சி தொழில்நுட்ப உத்தியோகத்தர் இ.குணநாயகம் ஆகியோரும் கலந்துகொள்வர்.
நிகழ்வொழுங்கில் மங்கல விளக்கேற்றலைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்தினை செல்வி கிறிசா மேரி அன்ரனியும் வரவேற்பு நடனத்தினை மன்னார் பரத கலாலயா நாட்டியப் பள்ளி மாணவிகளும் வரவேற்புரையினை மன்னார் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் திருமதி. பு.மணிசேகரனும் ஆசியுரையினை மாங்குளம் அமைதிக் கரங்கள் இயக்குனர் அருட் பணி செ.அன்புராசாவும் வழங்குவர். சித்தமருத்துவக்கலாநிதி எஸ்.லோகநாதனின் திருப்புகழ் இசைத்தலைத் தொடர்ந்து தலைமையுரை இடம்பெறும். அறிமுகவுரையினை திருமதி.பொ.ரொவீனா நிகத்துவார்.
நூல் வெளியீட்டினைத்தொடர்ந்து முதல் பிரதியினை துரையம்மா அன்பகத் தலைவர் வே.மனுவேல்பிள்ளை பெற்றுக்கொள்வார்.
சிறப்புப் பிரதிகள் வழங்கலையடுத்து நூல் ஆய்வுரையினை தேசியக் கலைஞர் எஸ்.ஏ.உதயனும் கருத்துரையினை ஓய்வுநிலை ஆசிரியர் திருமதி.சாந்தி வாமதேவாவும் வழங்குவர். விருந்தினர்கள் உரைகளைத்தொடர்ந்து ஏற்புரையினை நூலாசிரியர் வை.கஜேந்திரனும் நன்றியுரையினை பி.அருள்ராஜும் நிகழ்த்துவர். மன்னார் புனித சவேரியர் பெண்கள் கல்லூரி மாணவி செல்வி.ம.ஜான்சியின் நடனமும் இடம்பெறும்.
இங்கனம்
வை.கஜேந்திரன்
(நூலாசிரியர்)
மன்னாரில் இன்று வை.கஜேந்திரனின் ‘மறுபிறப்பு’ நூல் வெளியீடு....
Reviewed by Author
on
December 12, 2016
Rating:

No comments:
Post a Comment