'வர்தா"வின் அச்சம் : மன்னாரில் தென்கடலில் கொந்தளிப்பு
மன்னார் வளைக்குடாவில் 'வர்தா' என்ற சூறாவளி கடந்து செல்லுவதனால் மன்னார் கடல் பிராந்தியத்தில் கடல் கொந்தளிப்பு காணப்படும் என தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் பெரும்பாலான மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. மன்னார் தென் கடல் பகுதியில் கடல் கொந்தளிப்பால் கடல் நீர் சுமார் பத்து அடிக்கு மேல் முன்னோக்கி வந்துள்ளதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
தென் கடல் பிராந்தியத்தில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு கடற்படையினர் அனுமதிக்கவில்லை.
அத்துடன் ஓரிரு இடங்களில் தென் கடல் பிராந்தியத்தில் கடற்கரையோரத்தில் கரவலையை காயப்போட்டிருந்ததால் கடல் நீர் முன்னோக்கி வந்தமையால் மணலில் புதைந்து அவைகள் மீனவர்களால் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
இதனால் பெரும்பாலான மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. மன்னார் தென் கடல் பகுதியில் கடல் கொந்தளிப்பால் கடல் நீர் சுமார் பத்து அடிக்கு மேல் முன்னோக்கி வந்துள்ளதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
தென் கடல் பிராந்தியத்தில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு கடற்படையினர் அனுமதிக்கவில்லை.
அத்துடன் ஓரிரு இடங்களில் தென் கடல் பிராந்தியத்தில் கடற்கரையோரத்தில் கரவலையை காயப்போட்டிருந்ததால் கடல் நீர் முன்னோக்கி வந்தமையால் மணலில் புதைந்து அவைகள் மீனவர்களால் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
'வர்தா"வின் அச்சம் : மன்னாரில் தென்கடலில் கொந்தளிப்பு
Reviewed by NEWMANNAR
on
December 12, 2016
Rating:

No comments:
Post a Comment