'மாந்தை மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்பினால் வறிய மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு
'மாந்தை மாற்றுத் திறனாளிகளுக்கான அமைப்பின் ஏற்பாட்டில் மடு வலயக் கல்வி அலுவலகத்திற்குற்பட்ட பகுதிகளில் மாற்றுத்திறனாளியாக உள்ள பெற்றோர்களின் பிள்ளைகளுக்கும், வறிய மாணவர்களுக்கும் பாடசாலை கற்றல் உபகரணங்கள் இன்று புதன் கிழமை(14) வழங்கி வைத்துள்ளனர்.
-குறித்த நிகழ்வில் விருந்தினர்களாக வட மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் கலந்து கொண்டார்.
மேலும் மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர், மடு வலய கல்விப்பணிப்பாளர், அதிபர்கள், மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு வைபவ ரீதியாக பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் 'மாந்தை மாற்றுத் திறனாளிகளுக்கான அமைப்பிற்கு' வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தனது மாகாண சபை பாதீட்டு நிதியில் இருந்து கொள்வனவு செய்த அலுவலக தளபாடங்களையும் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
-மன்னார் நிருபர்-
(14-12-2016)
-குறித்த நிகழ்வில் விருந்தினர்களாக வட மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் கலந்து கொண்டார்.
மேலும் மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர், மடு வலய கல்விப்பணிப்பாளர், அதிபர்கள், மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு வைபவ ரீதியாக பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் 'மாந்தை மாற்றுத் திறனாளிகளுக்கான அமைப்பிற்கு' வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தனது மாகாண சபை பாதீட்டு நிதியில் இருந்து கொள்வனவு செய்த அலுவலக தளபாடங்களையும் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
-மன்னார் நிருபர்-
(14-12-2016)
'மாந்தை மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்பினால் வறிய மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு
Reviewed by NEWMANNAR
on
December 14, 2016
Rating:

No comments:
Post a Comment