அரபிக் கடல் நடுவே பிரம்மாண்டமாக உருவாகின்றார் சத்ரபதி சிவாஜி!
மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜிக்கு மும்பையில் அரபிக் கடல் நடுவே பிரம்மாண்ட சிலை ஒன்று அமைக்கப்பட உள்ளது.
இதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டி வைத்துள்ளார்.
சத்ரபதி சிவாஜிக்கு மும்பை அரபிக்கடலில் நடுவே மகாராஷ்டிர மாநில அரசு சார்பில் மிக பிரம்மாண்டமாக சிலை மற்றும் நினைவு மண்டபம் அமைக்கப்பட உள்ளது.
இந்த சிலை 3,600 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையை விட இது உயரமானதாக நிறுவப்பட உள்ளது.
இந்த சிலை மற்றும் நினைவு மண்டப கட்டுமானத் திட்டத்திற்கு பிரதமர் மோடி நேற்று அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் மகாராஷ்டிர மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதலமைச்சர் பட்னாவிஸ், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே உள்ளிட்டோர் கலந்துகொண்டனமை குறிப்பிடத்தக்கது.
சத்ரபதி சிவாஜி...
1627 – பிப்ரவரி 19 நாள் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் பூனே மாவட்டதிலுள்ள “சிவநேரி கோட்டை” என்ற இடத்தில் பிறந்தார்.
1645 – தோர்னாக் கோட்டையைக் கைப்பற்றினார்.
1664 – சூரத்தை தாக்கி கொள்ளையடித்தல்.
1674 – ஜூன் 6 ல் ராய்கட் கோட்டையில், ‘சத்ரபதியாக’ முடிசூட்டிக் கொண்டார்.
1680 – ஏப்ரல் 3 ஆம் திகதி 53 ஆவது வயதில் காலமானார்.
அரபிக் கடல் நடுவே பிரம்மாண்டமாக உருவாகின்றார் சத்ரபதி சிவாஜி!
Reviewed by Author
on
December 25, 2016
Rating:

No comments:
Post a Comment