டிரம்ப் ஜனாதிபதியாவதற்கு சிக்கல்.....ஒபாமா வைத்த புதிய ஆப்பு!
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் வெற்றி பெறுவதற்காக ரஷ்யா உதவியதாக சி ஐஏ குற்றம் சாட்டியுள்ளதால், அது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளுமாறு ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்காவில் கடந்த மாதம் 8 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் குடியரசு கட்சியைச் சேர்ந்த டிரம்ப்புக்கும், ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஹிலாரி கிளிண்டனுக்கும் கடும் போட்டி நிலவியது.
இந்நிலையில் பாப்புலர் ஓட்டு என்று அழைக்கப்படுகிற மக்கள் ஓட்டு, ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கு அதிகமாக கிடைத்தது. அவர் 6 கோடியே 57 லட்சத்து 46 ஆயிரத்து 544 ஓட்டுகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் 6 கோடியே 29 லட்சத்து 4 ஆயிரத்து 682 ஓட்டுகள் பெற்றார்.
ஆனால் எலெக்டோரல் ஓட்டு என்னும் தேர்தல் சபை ஓட்டுகள், டிரம்புக்கு அதிகமாக கிடைத்ததால் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவர் 306 தேர்தல் சபை ஓட்டுகளையும், ஹிலாரி 232 தேர்தல் சபை ஓட்டுகளையும் பெற்றனர்.
இதைத் தொடர்ந்து வரும் ஜனவரி மாதம் 20 ஆம் திகதி டிரம்ப் ஜனாதிபதியாக பதவி ஏற்க உள்ளார். அதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றனர்.
இதற்கிடையில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் வெற்றி பெறுவதற்காக ரஷ்யா உதவிதாக மத்திய உளவு முகமை சிஐஏ குற்றம் சாட்டி உள்ளது.
இதற்காக ரஷ்ய அரசுடன் தொடர்புடைய தனி நபர்கள், ஹிலாரியின் ஜனநாயக கட்சி தேசிய குழு, ஹிலாரி பிரசார குழு தலைவர் பிரசாரம் தொடர்பான ஆயிரக்கணக்கான மின்னஞ்சல்களை இணையதளத்தில் தினந்தோறும் திருட்டுத்தனமாக புகுந்து திருடி, சமூகவலைத்தளங்களில் கசிய விட்டுள்ளதாகவும்.
இவ்வாறு செய்வதன் மூலம் ஹிலாரி தோல்வி அடைவார், டிரம்ப் வெற்றி அடைவார் என அவர்கள் செய்துள்ளதாக கூறியிருந்தது.
இதனால் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின்போது, இணையதளங்களில் சட்டவிரோதமாக ஊடுருவி நடத்தப்பட்ட திருட்டுகள் பற்றி விசாரணை நடத்துமாறு தற்போதைய ஜனாதிபதியாக உள்ள ஒபாமா அதிரடி உத்தரவு ஒன்றை அறிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பான விசாரணையை நடத்தி வரும் 20 ஆம் திகதிக்குள் அறிக்கையை சமர்பிக்குமாறு கூறியுள்ளார்.
டிரம்ப் ஜனாதிபதவி ஆவதற்கு அமெரிக்க மக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஒபாமாவின் இந்த புதிய உத்தரவு அவருக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்துமா, ஜனாதிபதி ஆவாரா என்ற கேள்வி எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
டிரம்ப் ஜனாதிபதியாவதற்கு சிக்கல்.....ஒபாமா வைத்த புதிய ஆப்பு!
Reviewed by Author
on
December 11, 2016
Rating:

No comments:
Post a Comment