யாழ்ப்பாணத்தை முற்றுகையிட்டுள்ள விஷேட அதிரடிப்படையினர்....!
யாழ்ப்பாணம் உள்ளிட்ட அதனை அண்மித்த பகுதிகளில் விஷேட அதிரடிப்படையினர் இரவு மற்றும் பகல் நேரங்களில் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக அண்மைய காலமாக வடக்கில் தலைதூக்கியுள்ள சமூகவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த ரோந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழந்ததை தொடர்ந்து, பொலிஸாரை இலக்கு வைத்து அண்மைய நாட்களாக வடக்கில் தாக்குதல் நடவடிக்கை இடம்பெற்றது.
இவ்வாறான தாக்குதல் நடவடிக்கைகளுக்கு ஆவா என்ற சமூக விரோத குழு ஒன்று உரிமை கோரியிருந்த நிலையில், அந்த குழுவை சார்ந்த பலர் அண்மையில் கைது செய்யப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இவ்வாறான பின்னணியிலேயே தற்போது யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் விஷேட அதிரடிப்படையினர் இரவு மற்றும் பகல் நேரங்களில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணத்தை முற்றுகையிட்டுள்ள விஷேட அதிரடிப்படையினர்....!
Reviewed by Author
on
December 11, 2016
Rating:

No comments:
Post a Comment