அண்மைய செய்திகள்

recent
-

கனடாவின் 150ஆவது வருடம் ஆரம்பிக்கின்றது!


கனடா தின பாரம்பரியம் இன்றிரவு கனடாவின் 150வது வருடத்தின் ஆரம்பத்திற்கு பயன் படுத்த மாற்றியமைக்கப்படுகின்றது.

Parliament Hill ற்கு யூலை 1 வழக்கமாக ஒதுக்கப்பட்ட பிரமாண்டமான வான வேடிக்கை இன்று இரவு 8.17 மற்றும் நடு இரவில் 2017ஐ வரவேற்க இடம்பெற உள்ளது.

நாடு முழுவதும் ஒரு நீண்ட பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஆரம்பமாக இது அமைகின்றது. நாடு பூராகவும் 19-நகரங்களில் New Year’s Eve நிகழ்வுகள் 150வது பிறந்த தின சுவையுடன் நடை பெற உள்ளது.

சென்ட்.ஜோன்ஸ், நியு பவுன்லாந் மற்றும் லப்ரடோரும் இதற்குள் அடங்கும். நடு இரவு மைல்கல்லை முதலில் எட்டுவது நியு பவுன்லாந்தாகும். தலைநகரின் கொண்டாட்டங்களிற்கான செலவு கிட்டத்தட்ட 2.5 மில்லியன் டொலர்களாகும்.

இசை நிகழ்ச்சிகள் உட்பட்ட பல் வேறு நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. கனடாவின் 150வது பிறந்த தின திட்டங்களிற்கு 210மில்லியன் டொலர்களிற்கும் மேலான தொகை தேவைப்படும் என கூறப்படுகின்றது.



கனடாவின் 150ஆவது வருடம் ஆரம்பிக்கின்றது! Reviewed by Author on January 01, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.