அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் வட்டக்கண்டல் கிராமத்தில் இடம் பெற்ற படுகொலையின் '32 ஆவது' ஆண்டு நினைவு தினம் இன்று அனுஸ்ரிப்பு-படங்கள்

மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட வட்டக்கண்டல் கிராமத்தில்  ஸ்ரீலங்கா இராணுவத்தால் இடம் பெற்ற படுகொலையினை நினைவு கூறும் வகையில் '32 ஆவது' ஆண்டு நினைவு தினம் இன்று திங்கட்கிழமை காலை மன்னார் வட்டக்கண்டல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் அனுஸ்ரிக்கப்பட்டது.

வட்டக்கண்டல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் அதிபர் ஏ.தேவதாஸ் தலைமையிலும்,வடமாகாண சபை உறுப்பினரும், எதிர்க்கட்சி தலைவருமான சி.தவராசாவின் அனுசரனையில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு; இடம் பெற்றது.

வட்டக்கண்டல் கிராமத்தில் கடந்த 30-1-1985 ஆம் ஆண்டு மன்னார் வட்டக்கண்டல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் அமரர் வி.சுந்தர மூர்த்தி மற்றும் ஆசிரியர்களான ரி.மகேந்திரன்,மற்றும் எஸ்.இரட்ணதுரை ஆகியோர் பாடசாலை வளாகத்தினுள் வைத்து சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதோடு பாடசாலை மாணவர்களும் பொது மக்களும் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த படுகொலைகளை நினைவு கூறும் வகையில் இடம் பெறவுள்ள '32 ஆவது' ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இவ்வாறு அனுஸ்ரிக்கப்பட்டது.

குறித்த நினைவேந்தல் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் சிறப்பு அதிதிகலாக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம், வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடமாகாண மீன் பிடி போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் வடமாகாண சபை உறுப்பினர்களான றிப்கான் பதியுதீன்,எம்.கே.சிவாஜிலிங்கள் ஆகியோர் கலந்து கொண்டு உயிரிழந்வர்களுக்கு மலர் தூவி சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

-குறித்த அஞ்சலி நிகழ்வின் போது வட்டக்கண்டல் கிராமத்தில் கடந்த 30-1-1985 ஆம் ஆண்டுசிறிலங்கா இராணுவத்தால்  படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள்,பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள்,அதிபர்கள், சர்வமதத் தலைவர்கள் என அனைவரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் நிருபர்-
(30-1-2017)

























மன்னார் வட்டக்கண்டல் கிராமத்தில் இடம் பெற்ற படுகொலையின் '32 ஆவது' ஆண்டு நினைவு தினம் இன்று அனுஸ்ரிப்பு-படங்கள் Reviewed by NEWMANNAR on January 30, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.