'மரியநாயகம்' அவர்களின் திடீர் இழப்பு தாங்கிக்கொள்ள முடியாத ஒரு பேரிழப்பு-செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.-Photos
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முக்கியஸ்தரும், தமிழ் தேசிய உணர்வாளருமான 'அன்ரன்' என அழைக்கப்படும் மன்னார் நானாட்டான் கொவ்வங்குளம் கிராமத்தைச் சேர்ந்த 'மரியநாயகம்' அவர்களின் திடீர் இழப்பு தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு ஓர் பாரிய பேரிழப்பு என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
அன்னாரது மறைவு செய்தி குறித்து அவர் விடுத்துள்ள இரங்கள் செய்தியில் மேலும் குறிப்பிடுகையில்,,,
மன்னார் நானாட்டான் கொவ்வங்குளம் கிராமத்தைச் சேர்ந்த அன்ரன் என அழைக்கப்படும் 'மரியநாயகம்' அவர்கள் தமிழ் தேசிய உணர்வாளராக செயற்பட்டவர்.
-எந்த நேரமும் சிரித்த முகத்துடன் அன்பாகவும்,பன்பாகவும் பழகக்கூடியவர்.
-பொது சேவைகள் மட்டுமின்றி அரசியல் வேளைகளுக்காக எம்முடன் கைகோர்த்து தமிழ் தேசியக்கூட்டமைபின் வெற்றிக்காக தன்னை அர்ப்பணித்தவர்.
நானாட்டான் ம.வி பாடசாலையின் அபிவிருத்திச் சங்க நிர்வாக உறுப்பினராகவும்,நானாட்டான் பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் கிளை முகாமையாளராகவும் செயற்பட்டவர்.
கடந்த திங்கட்கிழமை(2) காலை திடீர் சுகவீனம் காரணமாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி தனது 55 ஆவது வயதில் காலமானார்.
இவரது இழப்பு தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கும்,குறிப்பாக தமிழ் மக்களுக்கும் பாரிய இழப்பாக உள்ளது.
அவரின் திடீர் மறைவு செய்தி எங்களை துயரத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
நானாட்டான் பிரதேச மக்கள் இன்றி மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த அனைவருடனும் அன்பாகவும்,பன்பாகவும் பழகியவர்.
இறுதியாக இடம் பெற்ற பாராளுமன்ற தேர்தலின் போது கூட தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வெற்றிக்காக கடினமாக பாடுபட்டு பல்வேறு இடர்களுக்கு முகம் கொடுத்த ஓர் தமிழ் தேசிய உணர்வாளர்.அவரது பிரிவை ஒரு போதும் ஈடுசெய்ய முடியாது.
அன்னாரது பிரிவால் துயரத்தில் மூழ்கியுள்ள அன்னாரது மனைவி,பிள்ளைகள்,சகோதரர்கள்,உறவினர்கள் அணைவருக்கும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு சார்பாகவும்,தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) சார்பாகவும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் விடுத்துள்ள இரங்கள் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
'மரியநாயகம்' அவர்களின் திடீர் இழப்பு தாங்கிக்கொள்ள முடியாத ஒரு பேரிழப்பு-செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.-Photos
Reviewed by NEWMANNAR
on
January 04, 2017
Rating:

No comments:
Post a Comment