ஜெனிவாக்கூட்டத் தொடருக்கான கண் துடைப்பே மத்தியஸ்தர் சபை (சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு)
நீதி அமைச்சின் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவினால் காணிப்பிணக்குகளை தீர்பதற்கென அமைக்கப்பட்ட விசேட மத்தியஸ்த சபை (காணி) ஜெனிவா கூட்டத்தொடருக்கான கண்துடைப்பே அன்றி மக்களின் பிணக்குகளை தீர்ப்பதற்காக அமைக்கப்படவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சும த்தியுள்ளனர்.
நீதி அமைச்சின் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவினால் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் புதிதாக அமைக்கப்பட்ட விசேட மத்தியஸ்த சபைகளின் (காணி) மத்தியஸ்தர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு கடந்த மே மாதம் 27ஆம் திகதி; நீதி அமைச்சரும் ஜனாதிபதி சட்டத் தரணியுமான கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் யாழ் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் யாழ் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட விசேட மத்தியஸ்த சபையில் (காணி) 27 மத்திய ஸ்தர்களுக்கும் கிளிநொச்சி மாவட்ட மத்தியஸ்த சபையில் (காணி) 17 மத்தியஸ்தர்களுக்கும் நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.
குறித்த மத்தியஸ்த சபையானது வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களிலும் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மத்திய மாகாணத்தில் அநுராதபுரத்திலும் நீதி அமைச்சின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் குறித்த நியமனம் வழங்கப்பட்ட நாளில் இருந்து இந்த மத்தியஸ்தர்களுக்கான 3 நாட்கள் பயிற்சிப்பட்டறை நடைபெறும் என்றும் அதன் பின்னர் வடகிழக்கில் உள்ள காணி பிணக்குகள் தொடர்பாக பிரச்சினைக்கு தீர்வுகள் இணக்கங்கள் என்பன இவர்களால் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது. இவ் விடயம் ஜெனிவா கூட்டத்தொடரிலும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் கடந்த வருடம் மே மாதம் நியமனம் வழங்கப்பட்டு 3 நாள் பயிற்சிப்பட்டறையின் பின்னர் குறித்த மத்தியஸ்தர் சபையால் காணி தொடர்பான பிணக்கு நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்படவும் இல்லை அதற்கான அதிகாரங்கள் ஏற்பாடுகள் எவையும் குறித்த மத்தியஸ்தர்களுக்கு வழங்கப்பட்டதாகவும் தெரியவில்லை. இந்த நிலையில் நேற்றைய தினம் யாழ் மாவட்டச் செயலகத்தில் குறித்த மத்தியஸ்தர்களுக்கான 3 நாட்கள் பயிற்சிப்பட்டறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இப் பயிற்சிப் பட்டறையானது எதிர்வரும் மார்ச் மாதம் இடம் பெறவுள்ள ஜெனிவா கூட்டத் தொடரை இலக்கு வைத்து ஒரு கண்துடைப்புக்காக இடம்பெறுகிறதா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அத்துடன் இனிமேற்கொண்டு தொடர்ச்சியாக இச் சபை இயங்குமா? மக்களுக்கு நன்மை பயக்குமா? என்ற சந்தேகமும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஜெனிவாக்கூட்டத் தொடருக்கான கண் துடைப்பே மத்தியஸ்தர் சபை (சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு)
Reviewed by Author
on
January 25, 2017
Rating:

No comments:
Post a Comment