அண்மைய செய்திகள்

recent
-

தீர்வு அறிவிக்கும் வரை தமது போராட்டத்தை கைவிடப்போவதில்லை!

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தகவல்களை வெளியிடக்கோரியும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வவுனியா தபால் நிலையம் அருகே இன்றைய தினம் 3 ஆவது நாளாக உண்ணாவிர போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவினர்களுக்கு ஆதரவு தெரிவித்து நாடுமுழுவதும் உள்ள தமிழ் அரசியல் கைதிகள்அனைவரும் நாளை வியாழக்கிழைமை ஒருநாள் அடையாள உண்ணவிரத போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஒன்றிணைந்து 5 முக்கிய அம்ச கோரிக்கைகளை முன்வைத்து கடந்த திங்கட்கிழமை முதல் தொடர் உண்ணவிரத போராட்டதை ஆரம்பித்துள்ளனர். நேற்று இரண்டாவது நாளாக உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்துள்ள நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவுகள் உடல்நிலை மிகவும் சோர்வடைந்து காணப்பட்டதால் மருத்துவர்கள் அவ்விடத்துக்கு சென்று பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.
அவர்களின் போராட்டத்துக்கு பல்வேறு அமைப்புகள் இளைஞர்கள் உட்பட பலர் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் அரசியல் கைதிகளும் தமது ஆதரவினை தெரிவித்துள்ளனர் அந்த வகையில் கொழும்பு மகசின் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் 10 பேரும், அனுராதபுரம் சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் 18 பேரும் கண்டி தும்பர சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் 19 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் 10 பேரும் அத்துடன் ஏனைய சிறகைளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் ஒன்றிணைந்து ஒருநாள் அடையாள உண்ணவிரத போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அந்தந்த சிறைச்சாலை நிர்வாகத்தினருக்கு அறிவித்துள்ளனர்.
இதே வேளை அரசால் உரிய தீர்வு அறிவிக்கும் வரை தமது போராட்டத்தை கைவிடப்போவதில்லை என உறவினர்கள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
தீர்வு அறிவிக்கும் வரை தமது போராட்டத்தை கைவிடப்போவதில்லை! Reviewed by NEWMANNAR on January 25, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.