உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோரின் உடல்நிலை மோசம்!
வவுனியாவில் காணாமல்போனோரின் உறவுகளால் மூன்றாவது நாளாக மேற்கொள்ளப்பட்டு வரும் சாகும்வரையிலான உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக வவுனியா பொது வைத்தியசாலையின் வைத்தியர் தெரிவித்தார்.

உணவு தவிர்ப்பு போராட்டம் இடம்பெற்ற இடத்திற்கு இன்று வருகை தந்த வைத்தியர் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களை பரிசோதனை செய்ததன் பின்னரே இவ்வாறு தெரிவித்தார். வயோதிப தாய்மார் இருவரின் உடலில் சீனியின் அளவு மிகக்குறைவடைந்துள்ளதாகவும் இருவரும் மயக்கமுறும் நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதனால் மயக்கமுறும் சந்தர்ப்பத்தில் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு இளைஞர்கள் ஆதரவு வழங்கி வரும் நிலையில் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் அதிகளவில் பிரசன்னமாகியுள்ளனர். உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம் நாளை பேரணியொன்றினை நடத்த திட்டமிட்டுள்ளதுடன் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரனும் ஊடகவியலாளர் சந்திப்பொன்றினை நடத்தவுள்ளார்.
மூன்றாவது நாளாகவும் தொடரும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் இன்று தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி, வட மாகாண போக்குவரத்து அமைச்சர் பா. டெனிஸ்வரன், வட மாகாண முதலமைச்சரின் பொதுசன தொடர்பாடல் உத்தியோகத்தர், வட மாகாண சபை உறுப்பினர்களான எம். தியாகராசா, செ. மயூரன், கிறிஸ்தவ மத தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Reviewed by NEWMANNAR
on
January 25, 2017
Rating:

No comments:
Post a Comment