மன்னாரில் முதல் தடவையாக வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட மூட்டு மாற்று சத்திர சிகிச்சை....
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் என்பு நோய் விசேட வைத்திய சத்திர சிகிச்சை நிபுனர் கொண்ட குழுவினரினால் மன்னார் மாவட்டத்தில் முதல் தடவையாக 'முழங்கால் மூட்டு மாற்று சத்திர சிகிச்சை' வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எஸ்.ஆர்.யூட் தெரிவித்துள்ளார்.
வெற்றிகரமாக முதல் தடவையாக மேற்கொள்ளப்பட்ட முழங்கால் மூட்டு மாற்று சத்திர சிகிச்சை தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னாரைச் சேர்ந்த 60 வயதுடைய பெண் ஒருவருக்கே குறித்த முழங்கால் மூட்டு மாற்று சத்திர சிகிச்சை கடந்த டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி முதல் தடவையாக என்பு நோய் விசேட வைத்திய சத்திர சிகிச்சை நிபுனர் கொண்ட குழுவினரினால் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.
குறித்த சத்திர சிகிச்சையை மேற்கொள்ளுவதற்கு வளப்பற்றாக்குறை காணப்படுகின்ற போதும் உள்ள வளங்களை வைத்து குறித்த சத்திரசிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.
என்பு நோய் தொடர்பான விசேட சிகிச்சையானது (கிளினிக்) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் காலை நேரம் நடைபெறுகின்றது.
குறித்த சேவையை நாட விரும்புவோர் மன்னார் வைத்தியசாலையின் குறித்த பிரிவிற்குச் சென்று பெற்றுக்கொள்ள முடியும்.
வயது முதிர்ந்து மூட்டு நோயினால் நடக்க முடியாதவர்கள் குறித்த முழங்கால் மூட்டு மாற்று சத்திர சிகிச்சையினை மேற்கொள்ள முடியும் என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எஸ்.ஆர்.யூட் மேலும் தெரிவித்தார்.
மன்னாரில் முதல் தடவையாக வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட மூட்டு மாற்று சத்திர சிகிச்சை....
Reviewed by Author
on
January 06, 2017
Rating:

No comments:
Post a Comment