வறட்சியால் பாதீக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உடனடியாக நஸ்டஈட்டை வழங்க செல்வம் M.P கோரிக்கை(படம்,)
வடக்கு-கிழக்கு உற்பட நாட்டில் மழை இல்லாமையினால் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியின் காரணத்தினால் விவசாயிகள் பல்வேறு அசெகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்ற நிலையில் பாதீக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் மற்றும் நஸ்டஈட்டை வழங்க அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
குறித்த விடையம் தொடர்பாக பிரதமருக்கு கடிதம் ஒன்றை இன்று (13) அனுப்பி வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
வடக்கு-கிழக்கு உற்பட நாட்டில் மழை இல்லாமையினால் குளங்களில் உள்ள நீர் வற்றிய நிலையில் காணப்படுவதினால் விவசாயிகள் தமது விவசாய செய்கையை தொடர்ந்து மேற்கொள்ள முடியாத நிலையில் உள்ளனர்.
தமது விவசாய நடவடிக்கைகளுக்காக விவசாயிகள் வங்கியில் கடனைப்பெற்றுள்ளனர்.
தமது உடமைகளை அடகு வைத்து , காணிப்பத்திரங்களை அடகு வைத்தும் பணம் பெற்று தமது விவசாய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
எனினும் அவர்களுடைய விவசாயச் செய்கையின் நெற்பயிர்கள் வளர்ந்து வருகின்ற நிலையில் நீர் முற்றாக இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பாரிய துயரத்தை எமது விவசாயிகள் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர்.தற்போது இலங்கை அரசாங்கம் விவசாயிகள் பக்கம் தங்களுடைய பார்வையை திருப்ப வேண்டும்.
இல்லை என்றால் இந்தியாவிலே நடை பெறுகின்றது போல நீர் இல்லாது தமது பிள்ளை போன்று பயிர்களை நேசிக்கின்ற விவசாயிகள் தமது பயிர்கள் வாடுவதை பார்த்து சகித்துக்கொள்ள மாட்டார்கள்.
ஆகவே இந்த பட்டினிச்சாவு,வங்கிக்கடனை திருப்பி கொடுக்கின்ற சூழல்,உடமைகள்,நகைகள் அடைமானம்,ஆகியவற்றை மீட்டெடுக்க முடியாத இக்கட்டான நிலைக்கு எமது விவசாயிகள் தள்ளப்பட்டுள்ள சூழ் நிலையில் உடனடியாக போர்க்கால அடிப்படையில் விவசாயிகளுக்கு நிவாரணங்களை வழங்கி,அவர்களுக்கு நஸ்டஈட்டை வழங்குகின்ற ஒரு செயல்பாட்டை இலங்கை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று நாங்கள் பிரதமர் அவர்களை கேட்டிருக்கின்றோம்.
அதன் பிரகாரம் கடிதம் ஒன்று பிரதமருக்கு அனுப்பி துரித நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளேன்.
-உடனடியாக நடவடிக்கை எடுக்க தவறுகின்ற பட்சத்தில் விவசாயிகள் தமது பயிர்ச் செய்கையின் அழிவு மற்றும் தமது உடமைகளை மீட்டெடுக்காத நிலை மற்றும் வங்கிக்கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலை போன்றவற்றினால் தற்கொலை செய்கின்ற அல்லது பட்டினியால் மடிகின்ற நிலை ஏற்படும்.
எனவே இதனை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகளை புதிய அரசாங்கம் செய்யும் என்ற நம்பிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளேன்.
-பாதீக்கப்பட்ட விவசாயிகளுக்கு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளாது அதனை தவறும் பட்சத்தில் விவசாயிகள் எடுக்கின்ற ஒவ்வெறு நடவடிக்கைகளுக்கும் இந்த அரசாங்கம் பெறுப்புக்கூற வேண்டும்.
-எனவே குறித்த பிரச்சினை தொடர்பில் அரசாங்கம் துரித நடவடிக்கைகளை முன்னெடுத்து பாதீக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் மற்றும் நஸ்டஈட்டை வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
-மன்னார் நிருபர்-
வறட்சியால் பாதீக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உடனடியாக நஸ்டஈட்டை வழங்க செல்வம் M.P கோரிக்கை(படம்,)
Reviewed by Author
on
January 13, 2017
Rating:

No comments:
Post a Comment