எப்போது வருவீர்கள் அப்பா..? யுத்தத்தில் தந்தையை இழந்த மகனின் கதறல்...
எப்போது வருவீர்கள் அப்பா..? யுத்தத்தில் தந்தையை இழந்த மகனின் கதறல்
தனது தந்தையாரை மீண்டும் காண்பதற்கு தான் மிகவும் ஆர்வமாக உள்ளேன் என்று 12 வயது சிறுவன் கண்ணீர் மல்க பாடிய கவிதை எல்லோர் மனத்தினையும் நெகிழ வைத்திருந்தது.
காணாமல் போனோரின் உறவினர்களால் வவுனியாவில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வவுனியாவினை பிறப்பிடமாக கொண்ட இந்த 12 வயதான சிறுவன் , கடந்தகாலத்தில் இடம்பெற்ற யுத்தத்தின் காரணமாக தனது தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வருகின்றார்.
மேலும் தந்தையின் இழப்பால் தவிக்கும் தாய் மற்றும் தனது ஏக்கத்தினை வெளிப்படுத்துவதற்காக அந்த சிறுவன் பாடிய கவிதை, அங்கிருந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியதுடன், இறுதியில் அந்த கடவுளுக்கு கருணை இருந்தால் எமக்கு உதவ வேண்டும் என கூறி சோகத்தினை தாங்கிக்கொள்ள இயலாமல் கதறி அழுகின்றான்.
இவ்வாறு யுத்தம் நிறைவடைந்து இன்றும் கூட தமது நெஞ்சில் யுத்த வடுக்களை மக்கள் சுமந்து வருகின்றார்கள் என்பதற்கு இது உதாரணமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது
s.sasi

எப்போது வருவீர்கள் அப்பா..? யுத்தத்தில் தந்தையை இழந்த மகனின் கதறல்...
Reviewed by Author
on
January 13, 2017
Rating:

No comments:
Post a Comment