அண்மைய செய்திகள்

recent
-

முதிரை மரக்குற்றிகளை கடத்தியவர்கள் கைது-Photos

வவுனியா புளியங்குளம் பழையவாடி பிரதேசத்தில் முதிரை மரக்குற்றிகளை கடத்திய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை இன்று (வியாழக்கிழமை) வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புளியங்குளம் பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் புளியங்குளம் பொலிஸ் நிலைய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரணசிங்க தலைமையிலான பொலிஸ் குழுவினர் இவர்களை கைதுசெய்துள்ளதோடு, 23 முதிரை மரக் குற்றிகளையும் கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட முதிரை மரக்குற்றிகளின் பெறுமதி சுமார் 400,000 ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது.


முதிரை மரக்குற்றிகளை கடத்தியவர்கள் கைது-Photos Reviewed by NEWMANNAR on January 05, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.