வடக்கையும், கிழக்கையும் இணைக்கும் வீதியை புனரமைக்க இந்தியா இணக்கம்: விக்கினேஸ்வரன்
வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைக்கும் வீதியை புனரமைப்பு செய்வதற்கு இந்திய அரசாங்கம் உதவிகளை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்திருப்பதாக வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண சபையின் 83வது அமர்வில் கலந்து கொண்டு பிரேரணை ஒன்றிற்கு பதில் அளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது வடகிழக்கு மாகாணங்களை இணைக்கும் வீதியை புனரமைப்பு செய்யவேண்டும் என பிரதி அவை தலைவர் கே.வி.கமலேஸ்வரன் பிரேரணை ஒன்றை முன்மொழிந்தார். அதற்கு
பதிலளிக்கும்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
வடகிழக்கு மாகாணங்களை இணைக்கும் வீதியை புனரமைத்து வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் உதவிகளை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.
அதற்கு முன்னர் இரு மாகாணங்களினதும் முதலமைச்சர்களின் ஒப்புதல் இதற்கு வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுள்ளனர்.
அந்தவகையில் இந்த விடயம் தொடர்பாக கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறேன். அதற்கு பதில் கிடைக்கவில்லை. இதில் சாதகமான தீர்மானம் எடுக்கப்படுமாக இருந்தால் அந்த வீதியை புனரமைப்பு செய்யலாம் என்றார்.
வடக்கையும், கிழக்கையும் இணைக்கும் வீதியை புனரமைக்க இந்தியா இணக்கம்: விக்கினேஸ்வரன்
Reviewed by Author
on
January 31, 2017
Rating:

No comments:
Post a Comment