1479 பேருக்கு கல்வி முதுமானி, கல்விமானி பட்டமளிக்கும் விழா...
தேசிய கல்வி நிறுவகத்தில் கல்வி முதுமானி மற்றும் கல்விமானி கல்வி நெறியை நிறைவு செய்த 770 கல்வி முதுமானி மற்றும் கல்விமானியினருக்கு பட்டமளிக்கும் விழா கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மண்டபத்தில் இன்று (31) நடைபெற்றது.
தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஜே.குணசேகர தலைமையில் நடைபெற்ற முதலாம் அமர்வு நிகழ்விற்கு பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஸ்ணன் கலந்துக் கொண்டார்.
இந் நிகழ்வில் நாடளாவிய ரீதியில் காணப்படும் தேசிய கல்வி நிறுவகத்தின் கிளை நிறுவகத்திலும் கொழும்பு தலைமை நிறுவகத்திலும் பயின்று பட்டம் பெற்ற 1479 பேருக்கு இந்த கல்வி முதுமானி மற்றும் கல்விமானியினருக்கு பட்டம் வழங்கப்பட்டது
இதேவேளை இந்நிகழ்வின் இரண்டாம் அமர்விற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்துக் கொள்ளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
1479 பேருக்கு கல்வி முதுமானி, கல்விமானி பட்டமளிக்கும் விழா...
Reviewed by Author
on
January 31, 2017
Rating:

No comments:
Post a Comment