சாகும் வரையான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட போகும் அனந்தி சசிதரன்...
நாட்டில் நடைபெற்ற போரில் காணாமல் போனவர்கள் சம்பந்தமான விடயத்தில் அரசாங்கம் சரியான பதிலை வழங்காது போனால் சாகும் வரையான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 22 ஆம் திகதி இந்த உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
யுத்தம் முடிந்த பின்னர் பாதுகாப்பு தரப்பினரிடம் சரணடைந்த தனது கணவர் உட்பட சிலர் குறித்து இன்னும் எந்த தகவலும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு காணாமல் போனவர்கள் சம்பந்தமாக அரசாங்கம் விசேட கவனத்தை செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சாகும் வரையான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டாவது காணாமல் போன தமது உறவினர்கள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளும் தேவை உறவினர்களுக்கு இருப்பதாகவும் அனந்தி சசிதரன் குறிப்பிட்டுள்ளார்.
சாகும் வரையான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட போகும் அனந்தி சசிதரன்...
Reviewed by Author
on
January 19, 2017
Rating:

No comments:
Post a Comment