மன்னரில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு-பாடசாலை ஒன்று காலவரையின்றி பூட்டு- சுகாதார வைத்திய அதிகாரி
மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இவ்வருடம் முதலாம் திகதி முதல் தற்போது வரை 25 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு அதில் பாடசாலை மாணவர்களும் உள்ளடங்குவதாக மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி வி.ஆர்.சி.லெம்பேட் தெரிவித்தார்.
மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு நோயளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவ்வாறு தெரிவித்தார்.
-அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த 2016 ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் 185 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
-இந்த நிலையில் இவ்வருடம் ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை 25 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் 12 பேர் தாழ்வுபாட்டு கிராமத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இவர்களில் பாடசாலை மாணவர்கள் 7 பேர் அடங்குகின்றனர்.
-தாழ்வுபாட்டு கிராமத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கின்ற 7 மாணவர்கலே டெங்கு நோயால் பாதீக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பாடசாலை மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி தாலைமையிலான குழுவினரினால் சோதனைகளுக்கு உற்படுத்தப்பட்ட போது குறித்த பாடசாலை வளாகத்தில் டெங்கு நோயின் பரவல் அதிகரிப்பதற்கான சூழல்களை கொண்ட இடம் கண்டு பிடிக்கப்பட்டது
.இந்த நிலையில் மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அனைவரினதும் ஒத்துழைப்புடன் குறித்த பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
-குறித்த பாடசாலையில் தற்போது டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
-தாழ்வுபாட்டு கிராமத்தில் சில பகுதிகளிலும் டெங்கு நுளம்பு பரவும் இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
மக்களின் பூரண ஒத்துழைப்பு முழுமையாக கிடைக்காததன் காரணத்தினால் டெங்கு நுளம்பின் பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை காணப்பட்டுள்ளது.
மேலும் சாவட்கட்டு,பெரியகடை உள்ளிட்ட சில கிராமங்களில் 13 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறிப்பாக மன்னாரில் உள்ள தனியார் கல்வி நிலையங்களினூடாக டெங்கு நுளம்பு பெருகுவதற்கான சந்தர்ப்பங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
-எனினும் மன்னாரில் உள்ள தனியார் கல்வி நிலையங்கள் தொடர்பான முழுமையான விபரங்கள் மன்னார் வலயக்கல்வித்திணைக்களம் மற்றும் மன்னார் பிரதேசச் செயலகத்தில் இல்லை.
-எனினும் மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி தலைமையிலான குழுவினரினால் மன்னாரில் அடையாளம் காணப்பட்ட சில தனியார் கல்வி நிலையங்கள் சோதனைகளுக்கு உற்படுத்தப்பட்ட போது பாவனைக்கு உற்படுத்தப்படாத மலசல கூடம், நீர்த்தொட்டி போன்றவற்றில் டெங்கு நுளம்பின் உற்பத்தி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பாடசாலை மாணவர்கள் தனியார் கல்வி நிலையங்களுக்கு கற்றல் நடவடிக்கைகளுக்காக செல்லும் காலை மற்றும் மாலை நேரங்களிலே டெங்கு நுளம்பின் தாக்கம் காணப்படுகின்றது.
எனவே டெங்கு நுளம்பின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் சில தினங்களுக்கு தனியார் கல்வி நிலையங்களின் கற்றல் நடவடிக்கைகளை நிறுத்தி கல்வி நிலையங்களை மூட அறிவுரை வழங்கியுள்ளோம்.
-எங்களுடைய அறிவுரைகளை மீறி தொடர்ந்தும் கல்வி நிலையங்களை இயக்குகின்ற தனியார் கல்வி நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக மன்னார் நீதிமன்றத்தினூடாக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மக்களின் பூரண ஒத்துழைப்பு இல்லாமையினால் டெங்கு நுளம்பின் அதிகரிப்பை கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது.
எனவே மக்கள் அதிகாரிகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கி தமது வீடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் டெங்கு நுளம்பின் பெருக்கத்தை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி வி.ஆர்.சி.லெம்பேட் மேலும் தெரிவித்தார்.
மன்னார் நிருபர்-
(5-1-2017)

Reviewed by NEWMANNAR
on
January 05, 2017
Rating:
No comments:
Post a Comment