அண்மைய செய்திகள்

  
-

கறிற்ராஸ்- வாழ்வுதயத்தினால் மன்னார் பொது வைத்தியசாலைக்கு சக்கர நாற்காலிகள் அன்பளிப்பு


கறிற்ராஸ்- வாழ்வுதயத்தினால் மன்னார் பொது வைத்தியசாலைக்கு
சக்கர நாற்காலிகள் அன்பளிப்பு 31.01.2017

கறிற்ராஸ்- வாழ்வதயம் தனது 36 வருட வளர்ச்சியில் போர்க்கால சூழலைக் கருத்திற்கொண்டு அதிகரித்துகொண்டிருந்த போரினால்பாதிக்கப்பட்ட மக்களுக்கு கை கால்கள் போன்ற செயற்கை அவயவங்களைப் பொருத்தும் ஒரு பிரிவை உள்ளகத்துக்குள் உருவாக்கி அப்பிரிவு இன்று 18 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. அதன் ஞாபகமாக இன்று மன்னார் பொதுவைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் திருமதி றஜனி சிசில் அவர்கள் விடுத்த வேண்டுகோளிற்கிணங்க நோயாளிகள் பயன்பெறும் பொருட்டு சக்கர நாற்காலிகளை வைத்தியசாலைக்கு அன்பளிப்பாக வாழ்வுதய இயக்குனர் அருட் M. ஜெயபாலன் அடிகளார் வழங்கி வைத்தார்.

இச்சக்கர நாற்காலிகளானது தற்போது வீதி விபத்துக்களாலும் டெங்கு நோய் தாக்கங்களினாலும் மற்றும் ஏனைய வருத்தங்களினாலும் தாக்கத்திற்குள்ளாகி வைத்தியசாலைக்கு வருபவர்கள் வைத்தியத்திற்காக வெளிநோயாளர் பிரிவிலிருந்து
(OPD) விடுதிகளுக்கு
(Ward) 300-400
M வரை கொண்டு செல்வதற்கு பெரும் வரப்பிரசாதமாக அமையும் என்பதனை கருத்தில்கொண்டு இன்றைய தினம் புதிய தொழில்நுட்ப முறையிலான பெறுமதிமிக்க சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டது.


இன்றைய இன்நிகழ்வில் மன்னார் பொதுவைத்திய சாலையின் வைத்திய அதிகாரி K.M. . நிசாத் அவர்களும் OPD சிரேஸ்ட வைத்தியர்  K.D.P.D கெக்குல் தொட்டுவ அவர்களும் வைத்தியசாலையின் நிர்வாக உத்தியோகத்தர்
M.J.றோச் மற்றும் வைத்தியசாலையின் பிரதம லிகிதர் சஜானி அவர்களும் வாழ்வுதய நிர்வாக அலுவலர் திரு .A.M அல்மேடா அவர்களும் உதவிக்கர பிரிவின் இணைப்பாளர் திரு J.எமில்றாஜ் மற்றும் வாழ்வுதய பணியாளர்களும் வாழ்வுதய இயன்மருத்துவர்களும் பங்குபற்றினர்.

 இந்நிகழ்வில் வைத்தியர்கள் தமது கருத்துக்களை கூறும்போது வாழ்வுதய நிறுவனமானது எமது வைத்திசாலையுடன் இணைந்து இவ்வாறான உதவிகளை இன்று மட்டுமல்ல முன்னைய காலங்களிலிருந்து தொடர்ந்து வழங்கி வருவதையிட்டு இதன் இயக்குனர் அருட்பணி M.ஜெயபாலன் அடிகளாருக்கும் மற்றும் வாழ்வுதய அலுவலர்களுக்கும் பாராட்டினையும் நன்றிகளையும் தெரிவித்தனர் தொடர்ந்து வாழ்வுதயத்தின் பணிகள் எமது வைத்தியசாலைக்கு கிடைக்க வேண்டும் எனவும் வைத்தியர்கள் முன்வைத்தனர்.

மேற்படி வாழ்வுதய உதவிக்கர பிரிவானது மன்னார் மாவட்டம் மட்டுமல்ல இலங்கையின் பல மாவட்டங்களிலும் கறிற்ராஸ்- வாழ்வுதயதின் இயக்குனர் அருட்பணி M.ஜெயபாலன் அடிகளாரின் நெறிப்படுத்தலில் இத்துறைசார் பணியாளர்கள் ஊடாக சிறப்பான பணிகளை ஆற்றிவருகின்றது இவ் உதவிக்கர பணிகளில் குறிப்பாக .....
    Prosthetic Services – சார்பு உறுப்பு அவையங்கள்
    Orthotics Services – செயற்கை உறுப்பு அவையங்கள்
    Custom made of standard wheel chairs – சக்கர நாற்காலிகள்
    Different types of assistive  devices (Crutches, Walker) –நடமாடும் கருவிகள்
     Mobile services & Home visits - நடமாடும் சேவை மற்றும் வீடு தரிசிப்பு
    Advocacy & Referral – பரிந்துரை செய்தல்
    Awareness program – விழிப்புணர்வு கருத்தமர்வுகளை மேற்கொள்ளல்


போன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது இன்றுவரை வாழ்வுதயத்தின் மூலம் 3500 இற்கும் மேற்பட்ட பயனாளிகள் நன்மைகள் அடைந்துள்ளதோடு இவர்களில் நுற்றுக்கணக்கான பயனாளிகள் 5-6 மாதங்களுக்கொருதடவை செயற்கை அவயவங்களை திருத்துதல் மற்றும் உயரம்  எடைகளுக்கேற்ப மாற்றம் செய்தல் போன்ற சேவைகளையும் தொடர்ந்து பெற்று செல்லுகின்றனர்.

இவற்றோடு ஆறுமாதங்களுக்கொரு தடவை இரத்த வங்கி முகாமினையும் மன்னார் பொதுவைத்திய சாலையுடன் இணைந்து நடாத்தி வருகின்றார்கள். இவ் மனிதநேய அமைப்பாகிய கறிற்ராஸ்-வாழ்வுதயம் இன்று வரைதொடர்ச்சியாக பலதிட்டங்களினூடாக மக்களுக்கு தனது அரிய பணிகளை செவ்வனே திட்டமிட்டு சிறப்பாக ஆற்றி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
 











கறிற்ராஸ்- வாழ்வுதயத்தினால் மன்னார் பொது வைத்தியசாலைக்கு சக்கர நாற்காலிகள் அன்பளிப்பு Reviewed by Author on January 31, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.