இலங்கையின் முதலாவது தேசிய சுமோ விறுவிறுப்பாக இடம்பெற்றது
இலங்கை சுமோ சங்கம் முன்னெடுத்து நடத்திய இலங்கையில் முதலாவது தேசிய சுமோ போட்டி கடந்த நேற்று கொழும்பு இளைஞர் கிரிஸ்துவர் மண்டபத்தில் (YMCA) நடைபெற்றது.
இதில் 200 பேருக்கும் அதிகமான விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்தது.
இப் போட்டிகள் கணிஷ்ட மற்றும் சிரேஷ்ட பிரிவுகள் அடிப்படையில் நடைபெற்றுள்ளது.
சர்வதேச சுமோ போட்டிகளில் பங்குபற்றிய அனுபவசாலிகளான சமில கரவிட்ட, T.A.T.Aஜயசிங்க, G.A.W.W குணவர்தன ஆகியோர் ஆண்கள் சிரேஷ்ட பிரிவில் போட்டியிட்டுள்ளனர்.
ஜப்பானில் நடைபெற்ற மகளிருக்கான சுமோ போட்டியில் கலந்துகொண்ட துலக்ஷி ரங்கிகா கனிஷ்ட பிரிவில் பங்குபற்றியுளார்.
இவர்களில் சமில கரவிட்ட ஐக்கிய அமெரிக்க பகிரங்க சுமோ போட்டிகளில் (2015) பங்குபற்றி 5ஆவது இடத்தைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
சர்வதேச சுமோ போட்டிகளில் முதலாவது இலங்கையராக பங்குபற்றிய B.L லசன்த குணவர்தன, இவ் விளையாட்டை 2014இல் இலங்கையில் அறிமுகப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
அத்தோடு “சுமோ தேசிய பயிற்றுநராக தான் கடமையாற்றுவதால் தேசிய போட்டியில் தான் பங்குபற்றுவது உசிதமல்லவென” லசன்த குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஆண்கள் பிரிவில் சுமார் 200 சுமோ போட்டியாளர்களும் பெண்கள் பிரிவில் சுமார் 150 சுமோ போட்டியாளர்களும் பங்குபற்றுவர் என எதிர்பார்க்கப்படுவதாக லசன்த குணவர்தன குறிப்பிட்டார்.
இலங்கையின் முதலாவது தேசிய சுமோ விறுவிறுப்பாக இடம்பெற்றது
Reviewed by Author
on
January 27, 2017
Rating:

No comments:
Post a Comment