அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை தமிழரை திருப்பி அனுப்பிய சுவிஸ்: ஐரோப்பிய நீதிமன்றம் கடும் கண்டனம்...


சுவிட்சர்லாந்து நாட்டில் புகலிடம் கோரி வந்த இலங்கை தமிழரையும் அவரது குடும்பத்தினரையும் பாதுகாக்காமல் தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்பியதற்கு ஐரோப்பிய நீதிமன்றம் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.

இலங்கையில் நடைபெற்று வந்த உள்நாட்டு யுத்தத்தில் இருந்து தப்பிய தமிழர் ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் கடந்த 2009-ம் ஆண்டு சுவிஸில் குடியேறியுள்ளார்.

மேலும், புகலிடம் கோரி அரசாங்கத்திடம் அவர் விண்ணப்பம் செய்துள்ளார்.

ஆனால், தமிழரின் விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ளாத சுவிஸ் அரசு அதனை நிராகரித்தது. முயற்சியை கைவிடாத தமிழர் மேல்முறையீடு செய்துள்ளார்.


swissinfo.ch
எனினும், இறுதியாக அவரது விண்ணப்பத்தை நிராகரித்த சுவிஸ் அரசு அவரையும் அவரது குடும்பத்தினரையும் கடந்த 2013-ம் ஆண்டு தாய்நாடான இலங்கைக்கு அனுப்பி வைத்தது.

பெரும் வேதனையுடனும் அச்சத்துடன் கொலும்பு விமான நிலையத்தில் இறங்கியபோது அவரையும் அவரது குடும்பத்தினரையும் பொலிசார் கைது செய்தனர்.

மேலும், 13 மணி நேர விசாரணைக்கு பின்னர் அவரை சித்ரவதை செய்து சிறையில் அடைத்தனர்.

எனினும், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சிறையில் இருந்து அவர் தப்பியுள்ளார்.

இலங்கை தமிழருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் புகலிடம் அளிக்காமல், தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்பியது தொடர்பாக ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்துள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கின் இறுதி விசாரணை இன்று நீதிமன்றத்திற்கு வந்தபோது, தமிழருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் புகலிடம் வழங்காமலும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யாமல் திருப்பி அனுப்பிய சுவிஸ் அரசிற்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழர்களை திருப்பி அனுப்பியதன் மூலம் இலங்கை மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளுக்கு இடையே உள்ள ஒப்பந்தத்தை சுவிஸ் அரசு மீறியுள்ளதாக நீதிபதிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

எனினும், கடந்த அக்டோபர் மாதம் புகலிடம் கோரி வரும் இலங்கை நாட்டினரை திருப்பி அனுப்புவது தொடர்பாக அந்நாட்டு அரசுடன் சுவிஸ் அரசு ஒரு புதிய ஒப்பந்ததை மேற்கொண்டது.

இதன் அடிப்படையில் சுவிஸில் புகலிடம் அளிப்பதிலும், தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்பவதிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என சுவிஸ் அறிவித்தது.

இதனை தொடர்ந்து, இதே மாதம் இலங்கையில் இருந்து புகலிடம் கோரப்பட்ட 1,316 விண்ணப்பங்கள் நிலுவையில் வைக்கப்பட்டன.

கடந்தாண்டு யூன் மாதத்திற்குள் இலங்கையை சேர்ந்த 5,000 நபர்களுக்கும் அதிகமாக சுவிஸில் புகலிடம் அளிக்கப்பட்டது. இவர்களில் 3,674 நபர்களுக்கு ‘அகதிகள்’ என்ற அந்தஸ்த்து வழங்கப்பட்டது.

மேலும், இதே ஆண்டு இலங்கையை சேர்ந்த 1,613 நபர்களுக்கு தற்காலிக புகலிடம் அளிக்கப்பட்டதுடன், அவர்கள் எந்த நேரத்திலும் தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படும் சூழலில் இருந்துள்ளனர்.

ஒட்டுமொத்தமாக, தற்போது சுவிட்சர்லாந்து நாட்டில் இலங்கையை சேர்ந்த சுமார் 50,000 பேர் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


இலங்கை தமிழரை திருப்பி அனுப்பிய சுவிஸ்: ஐரோப்பிய நீதிமன்றம் கடும் கண்டனம்... Reviewed by Author on January 27, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.