அண்மைய செய்திகள்

recent
-

நாட்டில் 10 இலட்சம் வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதே எமது நோக்கமாக இருந்தது-மன்னாரில் அமைச்சர் மஹிந்த அமரவீர-(படங்கள் ,)

நாட்டில் 10 இலட்சம் வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதே எமது நோக்கமாக இருந்தது.ஆனால் மீன் பிடி அமைச்சினூடாக அவ்வாறான வேலைவாய்ப்புக்களை உருவாக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.எவ்வாறாக இருப்பினம் 2020 ஆம் ஆண்டுக்குள் ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்களை கடல் தொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சினூடாக இவ்வாறான திட்டங்களை அமுல் படுத்துவதன் மூலம் வழங்க முடியும் என கடல் தொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

மன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் நிர்மானிக்கப்படவுள்ள கடலட்டை இனப்பெருக்க கட்டிடத்தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (25) சனிக்கிழமை இடம் பெற்றது.

-இதன் போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் அவ்வாறு தெரிவித்தார்.

-அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,,,,

கடற்தொழில் அமைச்சினை பொருத்தவரையில் இலங்கையில் முதல் முதலாக கடலட்டை இனப்பெருக்க கட்டிடத்தொகுதிக்கான அமையப்பெருவது மன்னாரிலே.

கடலட்டை தற்போது குறைவடைந்து வருகின்ற நிலையில் அதன் பெருக்கத்தை அதிகரிக்கும் வகையில் செயற்கை முறை இனப்பெருக்கத்தின் மூலம் அதன் பெறுக்கத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றறோம்.

இதன் மூலம் அதிகலவான வருமானத்தையும்,அதிகமானவர்களுக் கு வேலை வாய்ப்புக்களையும் பெற்றுக்கொடுக்கக்கூடியதாக இருக்கும்.
உலக சந்தையில் கடலட்டையின் கேல்விக்கு நூற்றிற்கு 10 வீதம் கூட எம்மால் நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.குறித்த செயற்கை முறை இனப்பெறுக்கத்தின் மூலம் கடல் அட்டையில் உற்பத்தியை அதிகரித்துக்கொள்ள முடியும்.

குறித்த நிலையம் போல் முல்லைத்தீவிலும் ஒரு நிலையம் அமைக்கப்படவுள்ளது.இவ்வாறு அமைக்கப்படுகின்ற உற்பத்தி நிலையங்கள் மூலம் சந்தை வாய்ப்பினை நாங்கள் அதிகரித்துக்கொள்ள முடியும்.

மன்னாரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள குறித்த திட்டமானது இவ்வருடம் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்குள் நிறைவடைகின்றது.
எதிர் வரும் வருடம் ஜனவரி முதலாம் திகதி குறித்த திட்டத்திற்கான உற்பத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

குறித்த திட்டத்திற்காக நாங்கள் முதலீடு செய்கின்ற 180 மில்லியன் ரூபாயானது வருகின்ற வருடம் 750 மில்லியன் ரூபாய் வருமானத்தை பெருக்கக்கூடிய வகையில் இத்திட்டம் அமையப்பெற்றுள்ளது.

-இந்த திட்டத்தின் ஊடாக மன்னார் மாவட்டத்தில் 400 குடும்பங்களுக்கான வேலை வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.

-குறிப்பாக இப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்புக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்பதனை தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.

ஒவ்வெருவருக்கும் ஒரு மில்லியன் ரூபாய் வருமானத்தை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் ஒரு திட்டத்தை நாங்கள் இம்முறை ஆரம்பித்துள்ளோம்.

குறித்த திட்டத்தை முன்னெடுக்கும் வகையில் காணியை பெற்றுக்கொள்ளுவதற்காக மாவட்ட அபிவிருத்தி குழுக்களின் இணைத்தலைவர்கள் ஊடாக உரிய தீர்வு கிடைக்கப்பெற்றது.
இத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு ஆதரவு வழங்கி இருந்தார்கள்.

10 இலட்சம் வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதே எமது நோக்கமாக இருந்தது.ஆனால் மீன் பிடி அமைச்சினூடாக அவ்வாறான வேலைவாய்ப்புக்களை உருவாக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எவ்வாறாக இருப்பினம் 2020 ஆம் ஆண்டுக்குள் ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்களை கடல் தொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சினூடாக இவ்வாறான திட்டங்களை அமுல் படுத்துவதன் மூலம் வழங்க முடியும் என்பதனை தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.

பல்வேறு வகையான தொழில் வாய்ப்புக்களை வழங்கும் வகையில் பல்வேறு திட்டங்களை அமுல் படுத்தவுள்ளோம்.

2026 ஆம் ஆண்டு நாட்டிலே தொழில் வாய்ப்புக்களை வழங்குவதன் ஊடாக கிடைக்கின்ற வருவாயின் ஊடாக மீன்பிடியும் துரைகளில் உள்ளடங்கும் என்பதனை தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.
விவசாயத்தை பொருத்தவகையில் நாங்கள் பார்க்கின்றோம் அதிகமான நெல் உற்பத்தி செய்யப்படுகின்றது.ஆனால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது.

-காரணம் அந்த நாடுகளிலே எமது நெல்லுக்கு அங்கு கேல்வி வாய்ப்பு குறைந்த அளவிலேயே காணப்படுகின்றது.
அவர்கள் எமது அரிசியை சப்பிட மாட்டார்கள்.

ஆனால் மீன் உற்பத்தியில் இலங்கைக்கு என்று சொல்லி குறிப்பாக நண்டு,கடலட்டை போன்ற கடலுணவு பொருட்களுக்கு அதிகலவான கேல்வி காணப்படுகின்றது.

-இதனூடாக பாரிய வருமானத்தை பெற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தொழில் துறையாக இத்துறை அமைகின்றது.

-கடலுக்குச் சென்று மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் கடற்தொழிலில் ஈடுபட படகுகளை வழங்கும் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம்.

குறிப்பாக செயற்கை வளர்ப்பு முறைகளின் ஊடாக நாங்கள் பாரிய அளவில் வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்பதனை தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் பொதுச் செயலாளர் என்ற வகையில் மக்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள்,எமது கச்சியூடாக மக்களின் பிரச்சினைகளை எவ்வாறு தீர்ப்பது,திட்டங்களை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்து தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

இன,மத பேதம் இன்றி எமது திட்டங்களை நாங்கள் நல்ல முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதனை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

எமது கட்சியின் ஊடாக தமிழர்,சிங்களவர்,முஸ்ஸீம் என்ற இன மத வேறுபாடுகள் இன்றி அனைவரும் இலங்கை மக்கள் என்கின்ற ஒரு கொள்கைக்கு அமைவாக ஜனாதிபதி மைத்திரி பால சிரிசேன அவர்களின் வழிகாட்டலிலே நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து செயற்பட வேண்டும் என்பது தான் எமது கொள்கையாக காணப்படுகின்றது.

-மக்களுக்கிடையில் அனைத்தும் சமமாக பகிரப்பட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும்.வடக்கு,கிழக்கு பிரதேசங்களில் எமது கட்சியூடாக அனைவரும் ஒன்றினைத்து குறித்த திட்டங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

-ஜனாதிபதி அவர்களின் வேலைத்திட்டங்களை நல்ல முறையில் கொண்டு சென்று அமுல் படுத்த வேண்டும்.இன வேறுபாடுகளை தூண்டி பிரிவினைகளை ஏற்படுத்தாது அனைவரும் ஒற்றுமையுடன் செற்பட்டு திட்டங்களை வெற்றியடையச் செய்வோம்.என்பதனை கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.என அவர் மேலும் தெரிவித்தார்.
நாட்டில் 10 இலட்சம் வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதே எமது நோக்கமாக இருந்தது-மன்னாரில் அமைச்சர் மஹிந்த அமரவீர-(படங்கள் ,) Reviewed by NEWMANNAR on February 26, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.