மன்னார் முருங்கன் பேரூந்து தரிப்பிடத்தில் கண்டனப்பேரணி.(படம்)
கேப்பாப்புலவு காணி மீட்பு போராட்;டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், மன்னார் மாவட்டம் முள்ளிக்குளம் கிராம மக்களின் காணி அபகரிப்புக்கும் எதிராக மன்னார் மாவட்ட மக்கள் நடாத்தும் கண்டனப் பேரணி நாளை திங்கட்கிழமை முருங்கன் பேரூந்து நிலையத்தின் முன் இடம் பெறவுள்ளது.
-மன்னார்-மதவாச்சி பிரதான வீதியில் உள்ள முருங்கன் பேரூந்து தரிப்பிடத்திற்கு முன் நாளை திங்கட்கிழமை காலை 9 மணி தொடக்கம் மாலை 2 மணிவரை குறித்த கண்டனப் பேரணி இடம் பெறவுள்ளது.
-குறித்த கண்டன பேரணியில் இன உணர்வும்,மனிதாபிமானமும் உள்ள அனைத்து மக்களும் கலந்து கொண்டு எம் மக்களின் மண் மீட்புப் போரட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகின்றோம் என ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.
குறித்த போராட்டம் தொடர்பில் 'மன்னார் மாவட்ட மக்கள்' என்ற பெயரில் துண்டுப்பிரசுரங்களும் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் முருங்கன் பேரூந்து தரிப்பிடத்தில் கண்டனப்பேரணி.(படம்)
Reviewed by NEWMANNAR
on
February 26, 2017
Rating:

No comments:
Post a Comment