அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நகரசபையின் 2017ம்ஆண்டிற்கானஅபிவிருத்திதிட்டவேலைகள் தொடர்பானகலந்துரையாடல்.


மன்னார் நகரசபையின் 2017ம்    ஆண்டிற்கான கலந்துரையாடலானது மன்னார் நகரசபைச் செயலாளர் தலைமையில் நகரசபைமண்டபத்தில் 25.01.2017ம் திகதி பி.ப 3.00 மணியளவில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் 2017ம்   ஆண்டிற்கான நகரசபையின் ஆலோசனைக்குழு சமூகஅமைப்புக்கள் சனசமூகநிலையப்பிதிநிதிகள் மற்றும் நகரசபைஉத்தியோகத்தர்கள் என 42 பேர் கலந்துகொண்டனர்.
செயலாளர் அனைவரையும் வரவேற்றுக்கொண்டு கடந்தகாலசெயற்பாடுகளுக்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.  அதனைத் தொடர்ந்து இவ்வருடத்தில் செயற்படுத்தப் படவேண்டியவேலைத்திட்டங்கள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது.

இவ்வருடம் ADBமற்றும் JICA நிதியீட்டத்தின் கீழ் 50 வீதிகளுக்கு கொங்றீட் /காபட் வீதிகள் போடப்படவுள்ளது என்றும் இது மக்களால் முன்வைக்கப்பட்டமுன்னுரிமையின் அடிப்படையிலேயே தெரிவுசெய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்ததுடன் ஏனைய அவசரமாக புனரமைக்கப்பட வேண்டியவீதிகள் தொடர்பானவிபரம்சமூகஅமைப்புக்கள் மூலமாகமுன்வைக்கும் பட்சத்தில் சபை நிதியூடாக இவ்வருடம் முன்னுரிமைஅடிப்படையில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும் 2016ம் ஆண்டு 10 நாட்கள் நடைபெற்ற பண்டிகைக்கால  சந்தைகாரணமாக மக்களுக்கு சில போக்குவரத்து அசௌகரியங்கள் ஏற்பட்டாலும் அவற்றால் பெற்றுக்கொள்ளப்பட்ட 7.388.637.00ரூபா பணத்தில் இவ்வருடம் மேற்கொள்ளப் படவேண்டியவேலைத்திட்டங்கள் தொடர்பாக நீங்கள் முடிவெடுத்து அறிவிக்கும் பட்சத்தில் முன்னுரிமைஅடிப்படையில் மேற்கொள்ள சபை தயாராகஉள்ளதாகவும் தெரிவித்தார்.

கடந்த 2015ம் ஆண்டுபண்டிகைக்கால சந்தை மூலம் பெறப்பட்டவருமானத்தில் பொதுவிளையாட்டுமைதானம் புனரமைக்கப் பட்டதுடன் 15 கிராமங்களுக்கும் 15 வீதிகள் திருத்தபப்பட்டன என்பதையும் சுட்டிக்காட்டினார். இதனைச் சபையோரும் ஏற்றுக்கொண்டனர்.
மேலும் 2016ம் ஆண்டுமேற்கொள்ளவுள்ளவேலைத்திட்டங்கள் தொடர்பாகபொது அமைப்புக்களால் பலமுன்மொழிவுகள் தெரிவிக்கப்பட்டன. 15 கிராமசேவையாளர் பிரிவுகளுக்கும் முன்னுரிமை அடிப்படையில் திட்டங்களைமேற்கொள்வது என ஒரு பகுதியினர் தெரிவிக்க பெரும்பாலானவர்கள் ஒரு தொகையினை பிரதானபாதைகள் விளையாட்டு மைதானம் போன்றவற்றிற்கு நவீன தெருவிளக்குகளை பொருத்தலாம் எனக் குறிப்பிட்டனர்.அதுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அத்துடன் மிகுதிப் பணத்தினைப் பொதுப் பயன்பாட்டுத் திட்டத்திற்கு முன்னுரிமை அடிப்படையில் பயன்படுத்தலாம் எனத் தீர்மானிக்கப்பட்டது. அவற்றில் சேமக்காலைகள் புனரமைப்பு முக்கியவீதிகள் புனரமைப்பு போன்ற பணிகளுக்காக செலவிடுமாறு கூறப்பட்டுஏற்றுக்கொள்ளப்பட்டது.அத்துடன் கிராமங்கள் தோறும் தேவையானதெருவிளக்குகள் தொடர்பாககிராமிய சங்கங்கள் ஊடாககோரிக்கையை முன்வைக்குமாறும் அடுத்தகட்டத்தில் மேலதிகதீர்மானங்களை ஆலோசனைக்குழு  ஊடாகமேற்கொள்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

கிராமங்களின் அபிவிருத்தி தொடர்பான விடையங்களை  தேவைகளை எனதும் எனது அலுவலகர்களுக்கும் தெரியப்படுத்துவதன் மூலமும் கலந்தாலோசிப்பதன் மூலமும்  நிறைவான அபிவிருத்தியை மேற்கொள்ளலாம் அதற்கு மக்கள் துணையாக இருக்க வேண்டும்.

 முதல் கட்டமாக மன்னார் நகரப்பகுதிக்குள்(BUS STAND) மின்விளக்குகள்  பொருத்தும் பணி ஆரம்பித்துள்ளனர்.
தொகுப்பு- வை-கஜேந்திரன்-




மன்னார் நகரசபையின் 2017ம்ஆண்டிற்கானஅபிவிருத்திதிட்டவேலைகள் தொடர்பானகலந்துரையாடல். Reviewed by Author on February 07, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.