அண்மைய செய்திகள்

recent
-

கருக்கலைப்பு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்வதை நிறுத்த கோரி ஜனாதிபதிக்கு கடிதம்...


இலங்கையில் கருக்கலைப்பை மேற்கொள்ளக் கூடியதான குற்றவியல் சட்டத்தில் திருத்தங்களை செய்ய நீதியமைச்சு தயாராகி வருவதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம் என அமல உற்பவ கன்னி மரியாளின் சமூக மற்றும் கல்விப்பணிகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் அவ்வமைப்பின் தலைவர் எஸ்.கொண்சன்ரைன் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவிற்கு நேற்று செவ்வாய்க்கிழமை கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,

குறித்த திருத்தங்களை முன்வைப்பதற்காக உயர்நீதிமன்ற நீதியரசரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான பீ.பி.அலுவிஹார தலைமையில் அமைக்கப்பட்ட குழுவை உடனடியாக கலைக்க வேண்டுமென ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கின்றேன்.

எமது தாய் நாட்டின் கலாச்சாரத்தையும், அதன் கௌரவத்தையும் சீரழிக்கும் வகையில் அமையப்போகும் இச்சட்டத்தினால் எமது தாய் நாடு இறைசாபத்திற்கு உள்ளாகப் போவது உறுதி.

இவ்வுலகில் வாழும் உயிரினங்களுள் மனிதன் மட்டுமே தன் இனத்தை கருவிலிருந்தே அழிக்க முற்படுகின்றான்.

கருக்கலைப்பை மேற்கொள்ளக் கூடியதான குற்றவியல் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதைவிட அதற்கு மாற்றீடாக வேறு ஒரு பொறிமுறையை மேற்கொள்வது சிறப்பானதாகவும், நன்மையானதாகவும் அமையும்.

இக்குற்றவியல் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அனுமதிக்கப்படுமாயின் அரசாங்காகமே கருக்கலைப்பை ஊக்குவிப்பதாக அமையும்.

எனவே இந்த முயற்ச்சியை உடனடியாக கைவிடும்படி கேட்டுக்கொள்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், குறித்த கடிதத்தின் பிரதிகள் பிரதமருக்கும், நீதியமைச்சுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருக்கலைப்பு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்வதை நிறுத்த கோரி ஜனாதிபதிக்கு கடிதம்... Reviewed by Author on February 08, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.