ஒரு தவறினால் இரண்டு ஜெக்பொட் வென்ற அவுஸ்திரேலியர்...
அதிர்ஷ்ட லாபச் சீட்டொன்றில் தவறுதலாக ஒரே இலக்கங்களைப் பதிவுசெய்த அவுஸ்திரேலியருக்கு, ஒரே நேரத்தில் இரண்டு ஜெக்பொட் பரிசுகள் கிடைத்துள்ளன.
மெல்போனைச் சேர்ந்த இவர், எதேச்சையாக அதிர்ஷ்ட லாபச் சீட்டு நிலையம் ஒன்றுக்குள் நுழைந்திருக்கிறார். அங்கே லொட்டோ வகையான - வாடிக்கையாளர் விரும்பும் இலக்கங்களைத் தெரிவுசெய்யும் - அதிர்ஷ்ட லாபச் சீட்டுக்கள் இரண்டை வாங்கினார்.
தவறுதலாக, ஒரே இலக்கங்களையே இரண்டு சீட்டுக்களிலும் புள்ளடியிட்டுச் சமர்ப்பித்தார்.
ஒரு வாரத்தின் பின், அதாவது கடந்த நான்காம் திகதி நடைபெற்ற சீட்டிழுப்பில், இவர் குறிப்பிட்டிருந்த அதே இலக்கங்கள் வெற்றிபெற்றன. இதையடுத்து, அவருக்கு ஒவ்வொன்றும் ஒரு மில்லியன் டொலர் பெறுமதியுடைய இரண்டு ஜெக்பொட் பரிசுகள் கிடைத்தன.
முதல் பரிசு அறிவிக்கப்பட்டதும் சந்தோஷப்பட்ட அவர், இரண்டாவது சீட்டை ஒப்பிட்டுப் பார்த்தபோது அதிலும் ஒரே இலக்கங்களைக் குறிப்பிட்டிருந்ததைக் கண்டு ஆனந்த அதிர்ச்சியின் எல்லைக்கே சென்றுவிட்டார்.
மொத்தமாக, ஏறக்குறைய இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர்களுக்குச் சொந்தக்காரராகியிருக்கும் இவர், வீடொன்றையும், பெராரி ரக கார் ஒன்றையும் வாங்கப்போவதாகவும், ஏழு உலக அதிசயங்களைச் சுற்றிப் பார்க்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஒரு தவறினால் இரண்டு ஜெக்பொட் வென்ற அவுஸ்திரேலியர்...
Reviewed by Author
on
February 08, 2017
Rating:
Reviewed by Author
on
February 08, 2017
Rating:


No comments:
Post a Comment