3 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட தமிழக வீரர்: அஸ்வினின் உருக்கமான கருத்து
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் இந்தாண்டிற்கான ஐபிஎல் போட்டிக்கு பஞ்சாப் அணிக்காக 3 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட தமிழக வீரர் நடராஜனின் வாழ்க்கை குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் உருக்கமாக பதிவு செய்துள்ளார்.
இந்தியாவில் வரும் ஏப்ரல் மாதம் ஐபிஎல் போட்டி துவங்க உள்ளது. இதில் பங்குகொள்வதற்காக இந்தியா மற்றும் ஏனைய அணிகளைச் சேர்ந்த வீரர்கள் ஏலத்தில் தங்கள் பெயர்களை பதிவு செய்திருந்தனர்.
இதில் ஒவ்வொரு வீரர்களும் குறித்த தொகைக்கு வாங்கப்படுவர். அதன் படி தமிழகத்தைச் சேர்ந்த தங்கரசு நடராஜன் பஞ்சாப் அணிக்காக 3 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் தனது டுவிட்டர் பக்கத்தில் தங்கரசு நடராஜனின் வாழ்க்கை குறித்து பதிவேற்றம் செய்துள்ளார்.
அதில், தங்கரசு தமிழகத்தின் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் அவர் ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் அவருடைய அப்பா தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருவதாகவும், அவருடைய அம்மா சாலையின் ஓரத்தில் சின்ன கடை வைத்து பிழைப்பு நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
சிறிய தொகையைக் கொண்டு வாழ்க்கை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. தற்போது அவர் தன்னுடைய திறமையால் 3 கோடி சம்பாதித்துள்ளார், இதனால் அவருக்கு ஒரு உத்வேகம் கிடைத்துள்ளது என்று அஸ்வின் குறிப்பிட்டுள்ளார்.
தங்கநடராஜனின் வாழ்க்கையை பிரபல நாளிதழ் கடந்த டிசம்பர் மாதம் வெளியிட்டுள்ளது என்று பதிவேற்றம் செய்துள்ளார்.
3 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட தமிழக வீரர்: அஸ்வினின் உருக்கமான கருத்து
Reviewed by Author
on
February 22, 2017
Rating:

No comments:
Post a Comment