74 அகதிகள் பிணமாக கரை ஒதுங்கிய கொடூரம்!
வடஆப்ரிக்க நாடான லிபியாவிலிருந்து அகதிகளாக தப்பி செல்ல முயன்ற 74 பிணமாக கரை ஒதுங்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லிபியாவின் தலைநகர் திரிபோலிக்கு அருகே கடலோரத்தில் சேதமடைந்த படகில் சில உடல்கள் உள்ளது தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து, சர்வதேச தொண்டு நிறுவனங்கள் மேற்கொண்ட சோதனையில், படகு மற்றும் கடலோரப் பகுதியில் இருந்த 74 உடல்களை மீட்கப்பட்டுள்ளன.
லிபியாவில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு போர் மற்றும் நிலையான அரசு இல்லாத காரணத்தால், அங்குள்ளவர்கள், ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் புகுந்து வருகின்றனர்.
இதை பயன்படுத்தி பலர், அதிக பணத்தை பெற்று, படகுகள் மூலம், மிகவும் ஆபத்தான மத்திய தரைக்கடல் வழியாக அழைத்துச் செல்கின்றனர். அவ்வாறு செல்லும்போது, படகுகள் விபத்தில் சிக்கி, பலர் உயிரிழப்பது தொடர் கதையாகி வருகிறது.
74 அகதிகள் பிணமாக கரை ஒதுங்கிய கொடூரம்!
Reviewed by Author
on
February 22, 2017
Rating:

No comments:
Post a Comment