இந்.தூதுவருக்கு அமெ.தூதுவர் விருந்து; சம்பந்தனும் கலந்து சிறப்பிப்பு...
அண்மையில் இலங்கைக்கான இந்தியத் தூதுவராக நியமிக்கப்பட்ட தரன்ஜித் சிங் சந்துவுக்கு, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் இராப்போசன விருந்து அளித்து கௌரவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவரின் வதிவிடத்தில் இடம்பெற்ற இந்த இராப்போசன விருந்தில், அரச மற் றும் எதிர்க் கட்சிப் பிரமுகர்கள், வெளிநாட்டு இராஜதந்திரிகள் பலரும் பங்கேற்றனர்.
முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், அமைச்சர்கள், மங்கள சமரவீர, ரவூப் ஹக்கீம், சாகல ரத்நாயக்க, ஏரான் விக்கிரமசிங்க, வெளிவிவகாரச் செயலர் எசல வீரக்கோன், பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெட்டியாராச்சி மற்றும் கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தூதுவர்களும், இராஜதந்திரிகளும் இந்த இராப்போசன விருந்தில் பங்கேற்றுள்ளனர்.
இந்.தூதுவருக்கு அமெ.தூதுவர் விருந்து; சம்பந்தனும் கலந்து சிறப்பிப்பு...
Reviewed by Author
on
February 12, 2017
Rating:

No comments:
Post a Comment