உரிமைகளை மீட்டெடுக்க தயார் நிலையில் மக்கள் சுரேஸ் சுட்டிக்காட்டு....
இந்த தீராத வெயிலுக்குள்ளும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டுள்ளார்கள், ஆனால் இங்கு எழுக தமிழ் நடக்கக் கூடாது என முன்னாள், இந்நாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் வேலை செய்திருந்தார்கள். நேற்றைய தினமும் கூட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று செய்துள்ளார்கள். ஆகவே தமிழ் மக்களுடைய இரத்தத்தோடு ஒன்றிய உரிமைகளை மீட்டெடுக்க மக்கள் எப்போதும் தயாராகவே உள்ளார் கள் என்பதனை குறுகிய அரசியல் இலாப நோக்கோடு செயற்படும் இவ்வாறானவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
யாழ்ப்பாணத்தில் எழுக தமிழ் நடைபெற்ற போது அதனை குழப்ப முயன்றவர்கள் மூக்குடைபட்டார்கள். இங்கும் அதனை குழப்புவதற்கு முயன்று மூக்குடைபட்டுப்போய் நிற்கின்றார்கள். எதிர்காலத்தில் இவ்வாறான தவறான சிந்தனைகளுக்கு இங்குள்ள மக்கள் எடுபடக்கூடாது என்பதனை நான் சுட்டி காட்டுகின்றேன் என யாழ். மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.கிழக்கில் எழுக தமிழ் பேரணியில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
உரிமைகளை மீட்டெடுக்க தயார் நிலையில் மக்கள் சுரேஸ் சுட்டிக்காட்டு....
Reviewed by Author
on
February 12, 2017
Rating:

No comments:
Post a Comment