அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாந்தை மனித புதை குழி விவகாரம்- விசேட குற்றப்புலனாய்வுப்பிரிவிற்கு மன்னார் நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு.(படம்)

மன்னார் நீதிமன்றம் விசேட குற்றப்புலனாய்வுப்பிரிவிற்கு மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை மனித புதைகுழி தொடர்பில் கட்டளை ஒன்றை பிரப்பித்துள்ளமைக்கு அமைவாக மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரனையை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா   இன்று புதன் கிழமை ஒத்தி வைத்துள்ளதாக காணாமல் போன குடும்பங்களின் உறவினர்கள் சார்பாக மன்றில் ஆஜரான சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவித்தார்.



குறித்த வழக்கு விசாரனை குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,,,



கடந்த வருடம் நவம்பர் மாதம் 7 ஆம் திகதி குறித்த மனித புதை குழி தொடர்பான விசாரனை மன்னார் நீதிமன்றத்தில் இடம் பெற்றது.



இதன் போது விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த வழக்கு விசாரனைகளை  இன்று  (புதன் கிழமை ) 15 ஆம் திகதி வரை ஒத்தி வைத்தார்.



இந்த நிலையில் குறித்த வழக்கு விசாரனை மீண்டும் இன்று   புதன் கிழமை விசாரனைக்காக மன்னார் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.



இதன் போது காணாமல் போன குடும்பங்களின் உறவினர்கள் சார்பாக சட்டத்தரணியாகிய நானும் மன்னார் சட்டத்தரணிகள் சங்கம் சார்பாக சட்டத்தரணிகளான எம்.சபூர்தின்,பிரிமூஸ் சிறாய்வா, ஜெபனேசன் லோகு ஆகியோரும் மன்றில் ஆஜராகியிருந்தனர்.



மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலக்ஸ்ராஜா முன்னிலையில் மாந்தை மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.



இதன் போது ஏற்னவே குற்றப்புலனாய்வுப்பிரிவிற்கு மன்னார் நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கு அமைவாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் வெளிநாட்டில் உள்ள சிறந்த தடவியல் நிபுனர் குழுவிற்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி இருந்தனர். குறித்த மின்னஞ்சலில்; மாந்தை மனித புதைகுழி வழக்கு தொடர்பில் ஏதாவது உதவியை வழங்குமாறு குற்றப்புலனாய்வுப்பிரிவினர் கோரியிருந்தனர்.



-இந்த நிலையில் தாம் அனுப்பிய மின்னஞ்சலுக்கு எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என மன்றில் முன்னிலையாகிய குற்றப் புலனாய்வுப்பிரிவினர் மன்றிற்கு தெரிவித்தனர்.



-இதன் போது பாதீக்கப்பட்ட மக்கள் சார்பாக ஆஜராகிய இருந்த சட்டத்தரணிகள் பாதீக்கப்பட்ட மக்களுக்கு குறித்த வெளிநாட்டு தடவியல் நிபுனர் குழுவினர் பதில் வழங்கியுள்ளமை குறித்து மன்றின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.



-மேலும் குறித்த தடவியல் நிபுனர் குழுவினர் மார்ச் மாதம் அளவில் குறித்த மனித புதை குழி தொடர்பில் தேவையான உதவிகளை செய்வதாகவும்,தாம் எவ்வாறான பரிசோதனைகளை செய்ய வேண்டும் என்றும் 'றேடியோ காபன்' பரிசோதனை இறுதிக்கட்டத்தில்  செய்யப்பட வேண்டும் என்றும் குறித்த மனித புதை குழியின் வயதையும்,மரணம்,சம்பவத்தை அளவிடுவதற்கு குறித்த பரிசோதனை உடனடியாக தேவை இல்லை என்றும்  அது சம்பந்தமான பூரண ஒத்துழைப்பை தாம் வழங்க தயாராக இருப்பதாகவும் குறித்த பரிசோதனைகளுக்கு தேவையான நிதி வசதிகளை தாமே மேற்கொள்ளுவதாகவும் வெளிநாட்டில் உள்ள குறித்த தடவியல் நிபுனர் குழுவினர் அனுப்பி வைத்துள்ள மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளதாக காணாமல் போன குடும்பங்களின் உறவினர்கள் சார்பாக மன்றில் ஆஜரான சட்டத்தரணிகள் கௌரவ மன்றின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.



குறித்த தடவியல் நிபுனர் குழுவினர் அனுப்பிவைத்துள்ள மின்னஞ்சல் தொடர்பில் சட்டத்தரணிகள் மன்றின் கவனத்திற்குகொண்டு வந்த நிலையில் நீதிமன்றம் கட்டளை ஒன்றை பிரப்பித்துள்ளது.



இந்த மாதம் 27 ஆம் திகதி திங்கட்கிழமை அன்று குறித்த விடையம் தொடர்பிலான முழுமையான அறிக்கையினை சமர்ப்பித்து குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கான படி முறைகளை மேற்கொள்ளுமாறு விசேட குற்றப் புலனாய்வுப்பிரிவிற்கு நீதிமன்றம் கட்டளை ஒன்றை பிரப்பித்துள்ளது.



அதனடிப்படையில் குறித்த வழக்கு மீண்டும் எதிர்வரும் 27 ஆம் திகதி விசாரனைகளுக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ளது என காணாமல் போன குடும்பங்களின் உறவினர்கள் சார்பாக மன்றில் ஆஜரான சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் மேலும் தெரிவித்தார்.
















மன்னார் மாந்தை மனித புதை குழி விவகாரம்- விசேட குற்றப்புலனாய்வுப்பிரிவிற்கு மன்னார் நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு.(படம்) Reviewed by NEWMANNAR on February 15, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.